தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

தலைப்புச் செய்திகள்|ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் வினேஷ் போகட் - பதக்க வேட்டையில் இறங்கிய இந்தியா!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் களம் காணும் வினேஷ் போகத் முதல் பதக்க வேட்டையில் இறங்கிய இந்தியா வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • சென்னையில் இரு அரசுப் பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பேச்சாளரை கேள்வி கேட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியரை தவறாக பேசியதாலும் பிரச்னை.

  • பிற்போக்குத்தனமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு. மேலும், ஆசிரியரை அவமரியாதை செய்த பேச்சாளரை சும்மா விட மாட்டேன் என்றும் எச்சரிக்கை.

  • சர்ச்சைக்குரிய பேச்சாளர் மஹா விஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று சென்னை திரும்புவதாக அறிவிப்பு. , அமைச்சர் அன்பில் மகேஸிடம் விளக்கம் அளிப்பேன் என்றும் வீடியோ வெளியிட்டு பேச்சு.

  • நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் காரணமாக, கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • விஜய் தலைமையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் 50 ஆயிரம் இருக்கைகள், 1000 பேருந்துகள், 300 வேன்கள், 1000 இரு சக்கர வாகனங்கள் வரும் என பதில் மனுவில் தகவல் வெளியாகியுள்ளது.

  • விஜயின் GOAT திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 126 கோடி ரூபாய் வசூல் என பட;த் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

  • ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களம் காண்கிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட். கட்சியில் இணைந்த சில மணி நேரத்திலேயே வெளியான அறிவிப்பு.மேலும், பஜ்ரங் புனியாவுக்கும் முக்கிய பதவி ஒதுக்கீடு.

  • மதுரை புத்தகத் திருவிழாவில் பக்தி பாடலுக்கு பள்ளி மாணவிகள் சாமியாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சமூகவலைதளங்களில் வெளியான வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • கும்பகோணத்தில் உணவகத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு மக்கள் அப்பகுதியை விட்டு அலறி ஓடினர்.

  • சென்னை பெருங்களத்தூரில் வாரவிடுமுறையையொட்டி பலர் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  • மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கிருஷ்ணகிரி பள்ளியில் போலி முகாம் நடத்த உடந்தையாக இருந்த என்சிசி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • சென்னை மணலிபுதுநகர் அருகே குழாய் உடைப்பால் எரிவாயு கசிவு. வான்நோக்கி புழுதி பறக்க எரிவாயு வெளியேறியதால் மக்கள் அச்சமடைந்தனர்.

  • பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் தங்கம் வென்று அசத்தல். குண்டு எறிதல் போட்டியிலும் வெண்கலம் கிடைக்க, பதக்கங்களின் எண்ணிக்கை 27ஆக உயர்வு.