தமிழகத்திற்கு மதுரை - பெங்களூரு, சென்னை - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
அரசியல் வேறுபாடுகளை விலக்கிவிட்டு குழந்தைகளுக்கு உலகத்தரமான கல்வியை அளிக்க முன்வர வேண்டும் என PM SHRI ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்.
மத்திய அரசு வேறு எந்த கல்விக் கொள்கையை திணித்தாலும் ஏற்க தயாராக இல்லை என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்.
முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழக அரசுக்கும் பெருநிறுவனங்களுக்கும் இடையே 900 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
தெற்காசியாவிலேயே இரவில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தும் முதல் நகரமாகிறது சென்னை. இந்நிலையில், இரவில் இறுதிக்கட்ட பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனால்,வாகனஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
திருச்சி என்.ஐ.டி.யில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் கைது. இதனையடுத்து, மாணவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது என என்.ஐ.டி. நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
பாலியல் அத்துமீறல் விவகாரத்தில் புகாரளிக்கச் சென்ற மாணவியிடம் இழிவாக பேசியதாக காவல்துறை மீது இபிஎஸ் குற்றச்சாட்டு. இது, உண்மைக்கு புறம்பான செய்தி என திருச்சி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
பாலியல் புகாரில் சிக்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ முகேஷ் பதவி விலக வலியுறுத்தல். இதனை வலியுறுத்தி, திருவனந்தபுரத்தில் போராடிய இளைஞர் காங்கிரசார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்த காவல்துறையினர்.
தூத்துக்குடி தனியார் ஆலையில் அமோனியா வாயு கசிந்ததில் மூச்சுத்திணறி ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு. , ஆலை நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.
பிரேசிலில் எக்ஸ் வலைத்தளத்திற்கு தடை. இதற்கு, உண்மையை மக்கள் அறிவதை கண்டு ஆட்சியாளர்கள் அஞ்சுவதாக எலான் மஸ்க் விமர்சனம்.
பாரீஸ் பாராலிம்பிக்கில் ஒரே நாளில் இந்தியாவுக்கு நான்கு பதக்கங்கள். ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் பதக்கங்களை வென்று வீரர்-வீராங்கனைகள் அசத்தல்.