இன்றைய காலை தலைப்புச் செய்திகள் Facebook
இந்தியா

காலை தலைப்புச் செய்திகள்|அமெரிக்கா சென்ற முதலமைச்சர் to ஜெய்ஷாவை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்!

PT WEB
  • அமெரிக்கா சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில், சான்பிரான்சிஸ்கோவில் பூங்கொத்து கொடுத்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் முதலமைச்சரை வரவேற்றனர்.

  • கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது பாராலிம்பிக் விளையாட்டு திருவிழா. முதல் நாள் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

  • பாராலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தவகையில், ஒவ்வொரு விளையாட்டு வீரரின் தைரியமும், உறுதியும் தேசத்தின் உத்வேகத்திற்கு ஆதாரமாக உள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

  • சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான அட்டவணை மற்றும் விதிமுறைகள் வெளியீடு. அதன்படி, பார்வையாளர்கள், கூர்மையான பொருட்கள், லேசர் லைட்டுகள், செல்லப்பிராணிகள், பாட்டில்கள் எடுத்துவர தடை.

  • ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஷட்டரில் துளை விழுந்து வீணாகும் தாமிரபரணி நீர்... போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணி மேற்கொள்ள விவசாயிகள் வலியுறுத்தல்.

  • தென்காசி: சரக்கு ஆட்டோ விபத்தில் உயிரிழந்த மூன்று விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

  • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார் சம்பாய் சோரன். நாளை தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய திட்டம்.

  • டெல்லியில் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களின் குறைகளை கேட்டறிந்த ராகுல்காந்தி. சரோஜினி நகர் பேருந்து பணிமனைக்கு நேரில் சென்றநிலையில், புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது காங்கிரஸ் .

  • கோவை தனியார் உணவகத்தில் 6 பிரியாணி சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்ற சலுகையால் குவிந்த மக்கள். பிரியாணி பிரியர்களின் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

  • வாழை பட கதையை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிவிட்டதாக எழுத்தாளர் சோ.தர்மன் பேட்டி. சோ.தர்மனின் 'வாழையடி' சிறுகதையை அவசியம் அனைவரும் வாசியுங்கள் என இயக்குநர் மாரி செல்வராஜ் முகநூலில் பதிவு.

  • ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய்ஷாவை விமர்சித்து நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளத்தில் பதிவு. ஜெய்ஷா ஒரு சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், விக்கெட் கீப்பர் என கிண்டல்.