தலைப்புச் செய்திகள் Facebook
இந்தியா

தலைப்புச் செய்திகள்|மேகதாது அணை விவகாரம் - நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்த இந்தியர்கள் சென்ற பேருந்து!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மேகதாது அணை விவகாரம் முதல் நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்த இந்தியர்கள் சென்ற பேருந்து வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • உக்ரைன் - இந்தியா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து செய்யப்பட்டதை அடுத்து, இருநாட்டு பிரதமரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக்கொண்டனர்.

  • இந்தியாவால் புதினை தடுத்து நிறுத்தவும், ரஷ்ய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தவும் முடியும் என்று பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பேட்டி.

  • பழனியில் இன்று தொடங்குகிறது அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு. இதன்காரணமாக, லேசர் உள்ளிட்ட ஒளிவிளக்குகளால் பாலதண்டாயுதபாணி கோயில் ஒளிர்ந்து கோலாகலம் பூண்டுள்ளது.

  • மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான ஆய்வுக்கு தமிழ்நாடு அரசின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய அரசிடம் அளித்துள்ள விண்ணப்பத்தில் கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளது.

  • மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்க துணைத் தலைவர் சேதுராமன் வலியுறுத்தல்.

  • எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. அப்போது, விசைப்படகில் சோதனையிட்டு, மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர் இலங்கை கடற்படையினர்.

  • வார விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்ட மக்கள் கூட்டத்தால், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இரவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  • கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு தொடரும் போராட்டம்.

  • நேபாளத்தில் இந்தியர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்த ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு 27ஆக அதிகரிப்பு. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய தூதரகம் செய்து வருவதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு.

  • நெல்லை திரையரங்கில் ரசிகர்களுடன் வாழை திரைப்படத்தை பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ். கலை வடிவிலேயே மக்களை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் இதுபோன்ற படங்களை எடுப்பதாக பதிலளித்துள்ளார்.