தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஒதுக்கீடு செய்ததைவிட 7 மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்திய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் பதிலளித்துள்ளார்.
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை- கொலை குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை. தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் காலை 10:30 மணிக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை தொடர்பாக மருத்துவமனை முன்னாள் தலைவரிடம் 4ஆவது நாளாக விசாரணை. மேலும், கைதான சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி.
வரும் 23ஆம் தேதி அரசுமுறை பயணமாக உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி.இந்நிலையில், அமைதியான முறையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் என இந்திய உறுதி.
டோலி கட்டி சிகிச்சைக்காக தூக்கிச்செல்லப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. திடீர் வெள்ளப்பெருக்கால் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளும், புதிய தலைமுறை செய்தி குழுவும் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது செய்யப்பட்டுள்ளார். இவரை வரும் 2ஆம்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு.
நில முறைகேடு புகாரில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தம்மீது எந்த தவறு இல்லை என சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோட் படத்தில் விஜயகாந்த், ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுடன் சந்தித்து நன்றி தெரிவித்ததாக தகவல்.
காஸாவில் போர் நிறுத்தம் கொண்டு வர அமெரிக்க முன்வைத்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றது எனவும், இதனை ஹமாஸும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் தென்பட்ட சூப்பர் நீல நிலவினை ஆர்வமுடன் மக்கள் கண்டு ரசித்தனர்.
ஆவணி மாத பெளர்ணமியை யொட்டி கோயில்களில் குவிந்த மக்களால், திருவண்ணாமலையில் நான்கரை மணி நேரம் காத்திருந்து வழிபாடு நடத்தப்பட்டது.