இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

தலைப்புச் செய்திகள் | 65 ஆண்டுகால அத்திக்கடவு அவிநாசி திட்டம் முதல் தேசிய திரைப்பட விருதுகள் வரை!

PT WEB
  • இன்று நிறைவேறுகிறது 65 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டம். இத்திட்டத்தை காணொலி வாயிலாக திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர்.

  • இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறது இந்திய மருத்துவ சங்கம். மேலும், அத்தியாவசிய சேவைகள் இயங்கும், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படாது என அறிவிப்பு.

கொல்கத்தா
  • நாடு தழுவிய போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படாது என அறிவிப்பு.

  • டிஎன்பிஎஸ்சியின் ஆண்டு அட்டவணையில் குரூப்-2 மற்றும் 2-ஏ தேர்வு தேதி மாற்றத்தால் குழப்பம். இருப்பினும் ஏற்கெனவே அறிவித்தபடி செப்டம்பர் 14 ஆம் தேதியே நடைபெறும் என விளக்கம்.

  • பாரிஸில் இருந்து இன்று தாயகம் திரும்புகிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். ஒலிம்பிக் பதக்க கனவு தகர்ந்தாலும் மக்களின் மனங்களை வென்றருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டம்.

  • மீண்டும் மல்யுத்த களத்தில் இறங்குவேனா என்பதை தற்போது கூற முடியாது. எது சரியோ அதற்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உறுதியாக தெரிவித்துள்ளார்.

வினேஷ் போகத்
  • ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1ஆம் தேதிகளில் 3 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடபெறவுள்ளது.மேலும், ஹரியானாவில் ஒரே கட்டமாக அக்டோபர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு.

  • 2022ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், சிறந்த தமிழ்த் திரைப்படம், பின்னணி இசை உள்பட 4 பிரிவுகளில் விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன் திரைப்படம். மேலும், சிறந்த நடிகராக 'காந்தாரா' ரிஷப் ஷெட்டியும், சிறந்த நடிகையாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், கேஜிஎஃப் படத்தின் சண்டை காட்சிக்காக அன்பறிவு சகோதரர்களுக்கும், 'மேகம் கருக்காதா" பாடலுக்கு சிறந்த நடனத்துக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.