Headlines face book
இந்தியா

Headlines: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான ரவுடி என்கவுன்ட்டர் முதல் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி வரை

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி என்கவுன்ட்டர் செய்யப்பட்டது முதல் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா சென்னையை அடுத்த அக்கரை அருகே காவல் துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல்.

  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் நகரில் புதிதாக இந்திய தூதரகங்கள் திறக்கப்படும் என இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி அறிவிப்பு.

  • இலங்கை அதிபராக இன்று பதவியேற்கிறார் அநுரா குமார திஸநாயக. இந்நிலையில், இருநாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்நோக்கி உள்ளதாக பிரதமர் மோடி வாழ்த்து.

அநுரா குமாரா திஸநாயக்கா
  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேருக்கு அக்டோபர் 4 வரை நீதிமன்றக் காவல். இந்நிலையில், மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி மயிலாடுதுறை, பூம்புகாரில் மீனவ அமைப்பினர் போராட்டம்.

  • திருப்பதி லட்டு விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவு.

  • திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வீடு முற்றுகை. மேலும், சுவரில் காவி வண்ணத்தை பூசி பாஜக இளைஞர் அமைப்பினர் கண்டன முழக்கம்.

  • கொடைக்கானல் மலைக்கிராம மக்களை அச்சுறுத்திய பூமிப்பிளவு. இதனை பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய குழு இன்று ஆய்வு செய்து வருகிறது.

  • செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணி வரலாற்று சாதனை ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தங்கம் வென்று அபாரம்.

  • செஸ் ஒலிம்பியாட்டில் சாதித்த இந்திய அணியிருக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து. மேலும், உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு.

  • அமெரிக்காவில் இரவு விடுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், 4 பேர் உயிரிழப்பு; மேலும், 18 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.