இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

தலைப்புச் செய்திகள் | ட்ரம்ப்-ஐ குறிவைத்து மீண்டும் துப்பாக்கிச்சூடு முதல் நிபா வைரஸ் மரணம் வரை!

PT WEB
  • டொனால்டு ட்ரம்பை குறிவைத்து மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல். இந்நிலையில், ட்ரம்ப் பாதுகாப்பாக உள்ளதாக சிறப்பு பாதுகாப்புப் படையினர் அறிக்கை.

  • உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் பாதுகாப்பாக மீட்பு. இந்நிலையில், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து மீட்கப்பட்ட மக்கள் உருக்கம்.

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் இன்று சந்திப்பு. முன்னதாக, ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் பேசியயிருந்ததால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

  • வன்னியர்களும், பட்டியல் சமூகத்தினரும்தான் அதிகளவில் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை.

அன்புமணி ராமதாஸ்
  • சென்னை திருவல்லிக்கேணியில், மசூதி அருகே மேளதாளம் முழங்க விநாயகர் சிலை ஊர்வலம் எடுத்துச்செல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

  • கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 24 வயது இளைஞர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்.

  • மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான தயாரிப்புகளை தொடங்கிய மத்திய அரசு. இதில், சாதி விவரங்களை கேட்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என தகவல்.

  • முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அர்விந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. மேலும், இனி மக்கள் தீர்ப்புக்கு பிறகே முதல்வர் நாற்காலியில் அமருவேன் என்றும் திட்டவட்டம்.

  • நைஜீரியாவில் சிறைச்சாலை சுவர் இடிந்ததால் 281 கைதிகள் தப்பியோட்டம். இந்நிலையில், 7 பேர் பிடிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைப்பு.

  • ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற பிரான்ஸ் வீரர், வீராங்கனைகள் கவுரவிப்பு.