தலைப்புச் செய்திகள்  புதிய தலைமுறை
இந்தியா

தலைப்புச் செய்திகள் | உயிர்போகும் நிலையில் வந்த மீனவர்கள் முதல் தொடரும் மருத்துவர்கள் போராட்டம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, உயிர்போகும் நிலையில் தப்பி வந்த மீனவர்கள் முதல் ஹைதராபாத்தில் வைக்கப்பட்ட மல்யுத்த விநாயகர் சிலை வரை பல முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது.

PT WEB
  • பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம். இந்நிலையில், பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • தமிழக மீனவர்கள் படகு மீது கப்பலால் மோதிய இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு. கவிழ்ந்த படகில் உயிர்போகும் நிலையில் இருந்து தப்பி வந்ததாக மீனவர்கள் குமுறல்.

  • “இளைஞர்கள் வர வேண்டும்; அவர்களுக்கு வழிவிடுங்கள்” என்று வேலூரில் நடந்த திமுக கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு.

அமைச்சர் துரைமுருகன்
  • கோவையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழகத்துக்கான மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில், ஜிஎஸ்டியில் மாற்றங்கள் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருவதாகவும் பேச்சு.

  • மத்திய அரசின் நிதிப்பகிர்வு தொடர்பாக தமிழ்நாடு உட்பட 8 மாநில முதலமைச்சர்களுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம். அதில், நியாயமற்ற அணுகுமுறை, முற்போக்கான மாநிலங்களின் நிதி சுயாட்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கருத்து.

  • 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு. ஆயுஷ்மான் பாரத் மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

  • கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்க மேற்குவங்க அரசு மறுப்பு. இந்நிலையில், இரவிலும் முழக்கங்களை எழுப்பியவாறு தொடர் போராட்டம்.

மேற்குவங்க மாநிலம்
  • வடமாநிலங்களில் விநாயகர் சிலைகளுக்கு விதவிதமான பூஜைகளுடன் களைகட்டும் கொண்டாட்டம். இந்நிலையில், ஹைதராபாத்தில் பக்தர்களின் கவனத்தை ஈர்க்கும் மல்யுத்த விநாயகர் வைக்கப்பட்டுள்ளார்.

  • அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக புதின் பெயரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என டிரம்ப், கமலா ஹாரிசுக்கு ரஷ்ய அதிபர் மாளிகை வேண்டுகோள்.

  • சென்னையில் நடைபெறும் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் இந்தியாவிற்கு 9 பதக்கங்கள். 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அபினேயா தங்கம் வென்று புதிய சாதனை.