இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

காலை தலைப்புச் செய்திகள் | மணிப்பூரில் வெடித்த கலவரம் முதல் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மணிப்பூரில் வெடித்த கலவரம் முதல் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • பிரேசில் ஜி20 மாநாட்டில் இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு. அனைவரும், ஒன்றாக குழுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

  • உலகளவில் நடக்கும் மோதல்களால் ஏற்படும் மாற்றங்கள் கவலை அளிப்பதாக பிரதமர் மோடி, ஜி20 மாநாட்டில் உரை. போர்களால் தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியிருப்பதாகவும் பேச்சு.

  • மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு. கூடுதலாக 5 ஆயிரம் வீரர்களை அனுப்பவும் உயர் நிலை ஆலோசனை கூட்டத்தில் முடிவு.

manipur
  • மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல். வெளிநாடு செல்லும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லையா என்றும் கேள்வி.

  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையேயான நிதிப் பகிர்வில் மாநில அரசுக்கே முழு அதிகாரம் வேண்டும் என 16ஆவது நிதிக் குழுவுக்கு தமிழக அரசு பரிந்துரை.

  • ஆழ்ந்த ஆராய்ச்சி, தெளிவான பகுப்பாய்வுடன் கூடிய விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசு. இதற்கு, 16ஆவது நிதிக் குழு தலைவர் அரவிந்த் பனகாரியா பாராட்டு.

  • 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என வெளியான தகவலுக்கு தமிழக வெற்றிக்கழகம் மறுப்பு. இந்நிலையில், பெரும்பான்மை பலத்துடன் அரசு அமைப்பதே குறிக்கோள் எனவும் தவெக விளக்கம்.

  • திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து பாகன் உள்பட இருவர் உயிரிழப்பு. பாகனின் உறவினர் நீண்ட நேரம் அருகே நின்று செல்பி எடுத்ததே யானையின் கோபத்திற்கு காரணம் என வனச்சரக அலுவலர் தகவல்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
  • உயிரிழந்த பாகனைத் தேடி சுற்றிவந்த திருச்செந்தூர் கோயில் யானை உணவு உட்கொள்ளவும் மறுத்ததால் சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு.

  • லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 12 கோடியே 41 லட்சம் ரூபாய் பறிமுதல். இந்நிலையில், 6 கோடியே 42 லட்சம் ரூபாய் வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை விளக்கம்.

  • தேனி, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

  • சில்வர் ஃபாய்ல் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை. மீறினால், உரிமத்தை ரத்து செய்து கடைக்கு சீல் வைக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை.

  • எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் செயற்கைக்கோள். 4,700 கிலோ எடையுள்ள ஜிசாட்-என்2 செயற்கைகோள் வெற்றிக்கரமாக செலுத்தப்பட்டது.

  • பிரேசிலில் ஜி20 மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகே பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம். காசா மீதான இஸ்ரேல் படைகளின் தாக்குதலுக்கு எதிராக முழக்கம்.