இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

காலை தலைப்புச் செய்திகள் | மணிப்பூர் கலவரம் முதல் கூட்டணி குறித்து விசிக திருமாவளவன் கருத்து வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம் முதல் கூட்டணி குறித்து பேசிய விசிக திருமாவளவன் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு.

  • மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறை எதிரொலியால், ஆளும் பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது தேசிய மக்கள் கட்சி.

  • மதுரையில் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, உரிய இழப்பீடு கோரி இரவிலும் போராட்டம் தொடர்ந்து நடைப்பெற்றது.

  • “கரப்பான் பூச்சிகளுக்கும் விஷ ஜந்துகளுக்கும் என்றைக்கும் நான் விஷக்காளான்தான்” என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
  • பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் போல் செயல்படுவதா? என சாம்சங் விவகாரத்தில் தமிழக அரசை கேள்வி எழுப்பும் சிபிஎம் எம்எல்ஏ.

  • தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான சூழல் கனியவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து.

  • பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கெளரவித்தார் நைஜீரிய அதிபர். இரு நாட்டு நட்புறவுக்கு முக்கியத்தும் அளிப்பதாக பிரதமர் மோடி புகழாரம்.

  • உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 1,000 ஆவது நாளை எட்டியது. இந்நிலையில், மின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் மின்சேவை பாதிப்பு.

  • லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தியதால், கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

  • ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் தொடர். இத்தாலி வீரர் யானிக் சின்னர் சாம்பியன்.