“நலத்திட்டங்களுக்கு கலைஞரின் பெயரை வைக்காமல் வேறு யார் பெயரை வைப்பது?” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.
இதற்கு, “தந்தையின் அடையாளத்தை வைத்து பதவி பெறுவதெல்லாம் திறமையில்லை” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.
பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, சட்டப்பேரவைத் தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அதிமுக தயார் என்று எடப்பாடி பழனிசாமி பதில்.
தஞ்சை பெரிய கோயிலுக்குள் ராஜராஜ சோழனுக்கு சிலை வைக்க வேண்டும் என 1039ஆவது சதய விழாவில் கவிஞர் வைரமுத்து கோரிக்கை.
சென்னையில் கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் வாகன தணிக்கையின் போது போலீசாரிடம் சிக்கியது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருடன் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், 3 பேர் காயம். இந்நிலையில், இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறந்த நடிப்பாற்றல் கொண்டவராக டெல்லி கணேஷ் திகழ்ந்தார் என பிரதமர் மோடி புகழாரம். திரையுலகில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்தவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
அமெரிக்காவை கண்டு அச்சப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து.
கேரளாவில் பிரியங்கா காந்தி பரப்புரைக் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டதில், காங்கிரஸ் கட்சியினர் - சிஆர்பிஎப் வீரர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.
காலிஸ்தான் பிரிவினைவாதி அர்ஷ்தீப் சிங் கில் கனடாவில் கைது. அவர், 'டைகர் போர்ஸ்' என்கிற தீவிரவாத அமைப்பின் தலைவனாக செயல்பட்டு வந்ததாக தகவல்.
ஒரே வாரத்தில் ட்ரம்புடன் 3 முறை பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ... காசா போர், ஈரான் நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை.
முதலாம் உலக போரில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் நிகழ்ச்சியில், காண்போரை கவர்ந்த ராணுவ அணிவகுப்பு மற்றும் இசை மழை.
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் , தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.