Headlines Facebook
இந்தியா

Headlines | உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி முதல் சிக்ஸர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி முதல் சிக்ஸர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி. இதன்காரணமாக, 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.

  • கனமழை காரணமாக ஸ்ரீபெரும்புதூர் அருகே மருத்துவக் கல்லூரிக்குள் வெள்ளம் புகுந்ததால் நோயாளிகள் அவதி. மேலும், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் கழிவு நீருடன் வெள்ளம் புகுந்ததால் பயணிகள் பரிதவிப்பு.

  • கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக கனமழை காரணமாக, தக்கலை அருகே குடியிருப்புகளில் ஆறுபோல் பெருக்கெடுத்த வெள்ளம்.

  • சாதிகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி என மகாராஷ்டிர தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு.

  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரினால் பிரதமர் மோடி மௌனம் காப்பதாக ராகுல்காந்தி விமர்சனம். மேலும், ஜார்க்கண்ட் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் இடஒதுக்கீடு அளவை 50 சதவீதத்துக்கும் மேல் உயர்த்துவதாகவும் வாக்குறுதி.

  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பணிக்காலம் நிறைவடையும்நிலையில், யாரையேனும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் என பிரிவு உபச்சார விழாவில் உருக்கம்.

தலைமை நீதிபதி சந்திரசூட்
  • தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக்கை நியமித்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு.

  • கந்தசஷ்டியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைப்பெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று பரவசத்துடன் வழிபாடு நடத்தினர்.

  • தமிழ்க்குடிகளின் பெருமன்னன் ராஜராஜ சோழனைக் கொண்டாடும் சதய விழா, காரணமாக, மின் விளக்குகளால் ஜொலிக்கும் தஞ்சை பெரிய கோயில் வளாகம்.

  • விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்திலான மணி கண்டெடுப்பு. இந்நிலையில், தமிழர் நாகரிகம், மூத்த நாகரிகமாக இருந்ததற்கு மேலும் ஒரு சான்று என அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் பதிவு.

  • திமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம். இந்நிலையில், செல்வராஜின் மறைவு அதிர்ச்சியளிப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்.

  • கடலூர் அருகே வாய்க்காலில் கழுத்தளவு நீரில் சடலத்தை தூக்கிச்செல்லும் மக்கள். இந்நிலையில், 20 லட்சம் ரூபாய் செலவில் நடைப்பாலம் கட்டித் தரப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி.

  • உதகை, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

  • சிறைத்துறை அதிகாரிகள் வீடுகளில் காவலர்கள் வீட்டு வேலை செய்கின்றனரா? என விசாரணை நடத்த உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

  • கேரள மாநிலம் வயநாட்டில் தாயை பிரிந்து சாலையில் தவித்த குட்டியானை. போகுமிடம் தெரியாமல் ஒவ்வொரு வாகனங்களின் பின்னாலும் ஓடிய பரிதாபம்.

  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி. இதில், சிக்ஸர் மழை

    பொழிந்து சதம் விளாசினார் சஞ்சு சாம்சன்.

சஞ்சு சாம்சன்
  • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு. மேலும், தாங்கள் ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த வலியுறுத்தியுள்ளதாக தகவல்.

  • நெதர்லாந்தில் கால்பந்து போட்டியை காண வந்த இஸ்ரேலிய ரசிகர்கள் மீது தாக்குதல். பாலஸ்தீன ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் பதற்றம்