Headlines முகநூல்
இந்தியா

Headlines | விஜய்க்கு கேள்வி எழுப்பிய திருமாவளவன் முதல் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் வரை!

இன்றைய காலை தலைப்பு செய்திகளானது, தவெக தலைவர் விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பும் விசிக தலைவர் திருமாவளவன் முதல் அமெரிக்கா வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • இலங்கை சிறையில் வாடும் 140 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை என வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்.

  • கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு 10 விழுக்காடு போனஸ். ஒதுக்கீட்டு உபரி உள்ள இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு மட்டும் 20 விழுக்காடு போனஸ் என அறிவிப்பு.

  • “விஜய்யின் கட்சி பாரதிய ஜனதாவின் 'C' டீம்” என சட்டத் துறை அமைச்சர் ரகுபதியும், “அதிமுக-வின் எண்ணங்கள், எதிரிகள் ஒன்றே” என முன்னாள் அமைச்சர் உதயகுமாரும் கருத்து.

  • ஃபாசிச எதிர்ப்பை விஜய் நையாண்டி செய்வது ஏன்? என பாஜக எதிர்ப்பில் உடன்பாடு இல்லை என புரிந்து கொள்ளலாமா என திருமாவளவன் கேள்வி.

திருமாவளவன்
  • தமிழ்நாட்டில் அதிகாரப் பகிர்வு குறித்து காங்கிரஸின் தேசியத் தலைமை தான் முடிவு செய்யும் என தவெக தலைவர் விஜயின் பேச்சு குறித்த கேள்விக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கருத்து.

  • விஜய் கொள்கையில் குழப்பமான மனநிலையில் இருப்பதாக பாஜகவின் ஹெச். ராஜா விமர்சனம்.

  • விஜய்யின் சினிமா வசனத்தை கொள்கையாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என காங்கிரஸின் ப.சிதம்பரம் கருத்து.

  • தவெக மாநாட்டிற்கு வரும்போது விபத்துகளில் உயிரிழந்த 6 தொண்டர்களின் குடும்பத்திற்கு விஜய் இரங்கல். தாங்கொணா துயரில் இருந்து வெளியே வர இயலாமல் மனம் தவிப்பதாக பதிவு.

  • சென்னை வேளச்சேரி - கடற்கரை இடையில் மீண்டும் பறக்கும் ரயில் சேவை. 14 மாதங்களுக்குப் பிறகு தொடங்கியது.

  • திருவனந்தபுரத்தில் விபத்தில் சிக்கிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாகனம். பாதுகாப்பு வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. மேலும், யாருக்கும் பாதிப்பில்லை என்று தகவல்.

  • கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 30 மடங்கு உயர்வு என குஜராத்தில் போர் விமான உற்பத்தி ஆலையை ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து தொடங்கி வைத்து நரேந்திர மோடி பெருமிதம்.

  • நாட்டின் செல்வங்கள் சிலர் கைகளில் குவிய மத்திய அரசு உதவுகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

  • மகாராஷ்ட்ராவில் மகா யுதி, மகா விகாஸ் அகாதி கூட்டணிகளில் முடிவாகாத தொகுதிப் பங்கீடுகள்.வேட்பு மனுத் தாக்கலுக்கு ஒருநாள் மட்டுமே எஞ்சிய நிலையில் தொடரும் இழுபறி.

  • அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம். பல்வேறு துறைகளை சேர்ந்த இந்திய பிரமுகர்களுகு விருந்தளித்த அதிபர் பைடன்.