கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தேனி, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
ஒடிசாவின் பிதர்கனிகா, DHAMRA இடையே மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது டானா புயல் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
டானா புயலின் தாக்கத்தால் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் கனமழை பெய்ந்தது. சூறைக்காற்று வீசுவதால் சாலையில் சாய்ந்த மரங்கள். மேலும், லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்.
விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு உலகை ஈர்த்துள்ளதாக, முதலமைச்சர் கோப்பை நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டுக்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டின. இந்நிலையில், பத்தாயிரம் ரசிகர் படைகள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட உள்ளதாக தகவல்.
சந்திரசூட் ஓய்வுபெற உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 51ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு.
சென்னையில் அரசு பேருந்தில் இருந்து கீழே விழுந்து நடத்துநர் உயிரிழப்பு. பயணியுடன் ஏற்பட்ட கைகலப்பால் நிகழ்ந்த சோகம்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக அறநிலையத்துறை குற்றச்சாட்டு. இந்நிலையில், ஆதாரங்களுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்.
மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த இண்டிகோ விமானங்கள். மழையின் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு தரையிறங்கியதால் பயணிகள் நிம்மதி.
தீபாவளி மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் 7 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு.
ஆந்திரா, பீகாரில் அமைகிறது இரண்டு பிரம்மாண்டமான புதிய ரயில் திட்டங்கள். இதற்கு, 6 ஆயிரத்து 789 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், இரண்டு வீரர்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு.
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளை தீவிரமாக தாக்கிவரும் இஸ்ரேல். இதனால், தலைநகர் பெய்ரூட்டில் உள்ள குடியிருப்பு பகுதிகள் தீப்பிழம்பாக மாறியது.
உக்ரைன், காசா, லெபனானில் அமைதி நிலவ நடவடிக்கை தேவை என பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களிடம் ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தல்.
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது நியூசிலாந்து.. முதல் இன்னிங்சில் 10 விக்கெட்களையும் வீழ்த்தி தமிழக வீரர்கள் அசத்தல்.