இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

Headlines | பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் சாதனை முதல் ‘பசு காவலர்களால்’ கொலை செய்யப்பட்ட மாணவர் வரை!

PT WEB
  • பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு ஒரே நாளில் ஐந்து பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதுவரை இல்லாத அளவாக இம்முறை 20 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

  • பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்தியா வீரர் ஷரத் குமார். மேலும் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கத்தை பெற்றார்.

  • சான்பிரான்சிஸ்கோவை தொடர்ந்து சிகாகோ சென்றார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இந்நிலையில், தமிழ் அமைப்புகள் சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

  • பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது புகார். இந்நிலையில், பெண் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • பாலியல் புகார் அளித்த பெண் யாரென்றே தெரியாது என நிவின் பாலி பேட்டி அளித்திருக்கிறார். மேலும் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  • மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்றம் கூறுவதை நிச்சயம் மதிப்போம் என சென்னையில் கர்நாடகா துணை முதலமைச்சர் சிவக்குமார் பேட்டி.

  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களுக்கு தலா ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் . இந்நிலையில், செலுத்த தவறினால் ஆறு மாதம் சிறை தண்ட்னை எனவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • தருமபுரியில் உணவக உரிமையாளர் சாப்பிட்ட உணவிற்கு கட்டணத்தை கேட்டபோது ஷூவால் அடிக்க பாய்ந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர். சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவக உரிமையாளரை அடிக்க பாய்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர்
  • அரசுமுறைப் பயணமாக புருனே நாட்டுக்கு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. இந்நிலையில், விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார் பட்டத்து இளவரசர் ஹாஜி அல் முத்தாதி பில்லா.

  • பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வழிவகை செய்யும் மசோதாவானது, மேற்குவங்க மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.

  • ஹரியானாவில் பசுவை கடத்தியதாக தவறாக எண்ணி 12ஆம் வகுப்பு மாணவர் சுட்டுக்கொலை. காரை துரத்திசென்று தாக்குதல் நடத்திய 5 பேர் கைது.

  • காந்தகார் விமானக்கடத்தல் வெப் சீரிஸில் பயங்கரவாதிகளின் உண்மைப் பெயர் வௌியிடப்படும் என மத்திய அரசு கேள்வி எழுப்பிய நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் விளக்கம்.