Headlines முகநூல்
இந்தியா

Headlines:ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் முதல் அர்ச்சகர்களுக்கு முழு அதிகாரம் வழங்கிய அரசாணை வரை

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் முதல் அர்ச்சகர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி அரசாணை வரை பல முக்கிய செய்திகளை இன்றைய தலைப்புச் செய்திகளில் பார்க்கலாம்...

PT WEB
  • தமிழகத்தில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம். அதன்படி, காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் அனுமதித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • கனவு ஆசிரியர் விருதுபெற்ற ஆசிரியர்கள் பிரான்சுக்கு கல்விச் சுற்றுலா அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில், திராவிட மாடல் அரசின் சிறப்பான முன்னெடுப்பு என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்.

  • ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வருவேன் என வாரணாசியில் ஆறாயிரம் கோடி ரூபாய் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு.

  • ஜம்மு-காஷ்மீரில் புலம் பெயர் தொழிலாளர்கள் முகாமில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல். மருத்துவர் உள்பட 7 பேர் உயிரிழப்பு.

ஜம்மு காஷ்மீர் தாக்குதல்
  • டெல்லியில் சி.ஆர்.பி.எஃப். பள்ளி அருகே மர்ம பொருள் வெடித்து விபத்தின் மூலம், பயங்கரவாத சதி செயல் காரணமா? என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை.

  • நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அச்சுறுத்தல் புரளிகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு உறுதி

  • ஆந்திராவில் கோயில் வழிபாட்டு முறைகளில் தலையிட அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை என ஆகம விதிகளை கடைப்பிடிக்க அர்ச்சகர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி அரசாணை.

  • மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் சமைத்த ட்ரம்ப். இதனை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி அதிபர் தேர்தலில் ஆதரவு திரட்டினார்.

  • லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நள்ளிரவில் குண்டுவெடிப்பு. ஹிஸ்புல்லா அமைப்பு செயல்படும் இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்.

  • மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து சாம்பியன். 32 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாதனை.