இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | வெளுத்து வாங்கிய மழை முதல் போருக்கு தயாரென அறிவித்த ஈரான் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, வெளுத்து வாங்கிய மழை முதல் போருக்கு தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்தது வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், கனமழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தல்.

  • சேலம், மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் வெளுத்து வாங்கிய மழை.

  • ஆயுத பூஜை தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள். மேலும், போக்குவரத்து நெரிசலால் ஆத்தூர், பரனூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் இன்றி சென்ற வாகனங்கள்.

  • ரயில் விபத்து நடந்த கவரைப்பேட்டை பகுதியில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், இரண்டு வழித்தடங்களிலும் புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கம்.

கவரைப்பேட்டை ரயில் விபத்துக் காட்சி
  • தமிழக அரசு ஊழியர்கள் பணியின்போது கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் எனவும், உத்தரவை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை.

  • மதுரை கள்ளழகர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற அம்புபோடும் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • குடும்பத்தினர் நிர்வகிக்கும் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிலத்தை திருப்பிக் கொடுக்கிறார் காங்கிரஸ் தலைவர் கார்கே. மூடா வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளதால் முடிவு.

  • சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்து புதிய ஆட்சி அமையவுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது நடவடிக்கை.

  • போருக்கு தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் நிலவும் சூழலில் ஈரானின் நிலைப்பாட்டால் மேலும் சிக்கல் நிலவுகிறது.

  • விண்ணில் செலுத்தப்பட்ட பிரமாண்டமான ராக்கெட்டை திரும்ப வரவழைத்து ஸ்பேஸ் எக்ஸ் சாதனை. சிலிர்க்க வைக்கும் காட்சிகள் வெளியீடு.

  • மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வி. அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறி.