காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

தலைப்புச் செய்திகள் | ரத்தன் டாடா மறைவு முதல் பழைய குற்றாலத்தில் பேரிரைச்சலுடன் பாய்ந்த வெள்ளம் வரை

PT WEB
  • டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா மும்பை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரழந்தார்.

  • ரத்தன் டாடா மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல். மேலும், ரத்தன் டாடாவின் தலைமைத்துவம் பல தலைமுறைகளுக்கு உத்வேகமளிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.

  • ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டே அறிவிப்பு. மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு.

ரத்தன் டாடா
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 2,208 இடங்கள் சேர்ப்பு. இதன்மூலம், மொத்த காலிப்பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு.

  • ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம். இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 880 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு.

  • நெல்லையில் பெய்த மழையால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேங்கிய தண்ணீர் காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு.

  • பழைய குற்றால அருவியில் திடீரென பேரிரைச்சலுடன் பாய்ந்த வெள்ளம். ஐந்தருவி, பிரதான அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • சாம்சங் ஊழியர்கள் இருவர் காவல் உதவி ஆய்வாளரை தள்ளிவிட்டதாக கைதான நிலையில், இவர்களுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் வழங்கியது ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம்.

  • சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள். மேலும், கூட்டணிக்கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்க அமைப்பு நடத்தும் போராட்டத்தை அரசியலாக பார்க்கவில்லை எனவும் பேட்டி.

சாம்சங் ஊழியர்களின் போராட்டம் - அமைச்சர் தங்கம் தென்னரசு
  • நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த ஊழியர்கள் விடிய விடிய போராட்டம். தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய ஊழியர்கள், கைதாகி பின்னர் விடுவிப்பு.

  • ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் காலை 9 மணி சிறப்புக்காட்சிக்காக தயாராகும் ரசிகர்கள்.

  • வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி. இரண்டுக்கு பூஜ்யம் எனும் கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தல்.

  • அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை நெருங்கும் அதி தீவிர மில்டன் புயல். முன்னெச்சரிக்கையாக லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்.