நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி. அவருக்கு சற்று நேரத்தில் மருத்துவப் பரிசோதனை நடைபெறவுள்ளதாக தகவல்.
ஜம்மு காஷ்மீர் சட்டபேரவை தேர்தலில் சற்று நேரத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால், 40 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி உரையாடல். அப்போது, உலகில் பயங்கரவாதத்திற்கு இடம் இல்லை என திட்டவட்டம்.
தமிழக அமைச்சரவையின் சீனியாரிட்டி வரிசைப் பட்டியல் வெளியீடு. அதில், துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு 3 ஆவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 2வது இடத்தில் நீர்வளத்துரை அமைச்சர் துரைமுருகன் இருக்கிறார்.
சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க அரசு நடவடிக்கை. மண்டலவாரியாக பணிகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்த 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்.
பருவமழைக்காலத்தில் ஒரு உயிரிழப்புகூட நேரிடாதவாறு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு வானிலை மேலும், முன்னறிவிப்புகளை TN ALERT செயலி மூலம் அறியவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மழைநீர் கால்வாயில் ஒருவர் உயிரிழந்ததற்கு அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடல்.
வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் பேனர்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் போன் தொழிற்சாலை சுமார் 3,700 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல்.
வக்ஃப் வாரிய சட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு. அனைத்து தரப்பு பிரதிநிதிகளும் கருத்துகேட்பில் பங்கேற்றதாக தமிழக சிறுபான்மையினர் துறை விளக்கம்.
திருப்பதி - திருமலையில் உள்ள தேவஸ்தான கிடங்குகள் மற்றும் ஆய்வகத்தில் சிறப்பு விசாரணைக்குழு ஆய்வு. லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை.
கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவைத்திருக்க வேண்டும் என்றும், கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகள் புண்பட்டிருப்பதாகவும் ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.
பழனி பஞ்சாமிர்தம் குறித்த அவதூறு வழக்கில் திரைப்பட இயக்குநர் மோகன் ஜிக்கு முன்ஜாமீன். மேலும், உண்மையிலேயே அக்கறை இருந்தால், பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்தில் கூட பணியாற்றலாம் என நீதிமன்றம் கருத்து.
உறவினரை கொலை செய்த குற்றத்திற்காக கைதான இளைஞர் காவல்துறையிடமிருந்து தப்ப முயன்ற நிலையில், அவருக்கு காலில் எலுப்பு முறிவு ஏற்பட்டது.
நாமக்கல் அருகே பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்கள், விசாகப்பட்டினத்தில் ஒருகோடியே 48 லட்சம் கொள்ளையடித்தது அம்பலம். மேலும், கேரளா, ஒடிசா, மேற்குவங்கத்திலும் ஏடிஎம்களை அறுத்து திருட்டு.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் எனவும், பல இடங்களில் அற்ப காரணங்களைக் கூறி அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்.
ஜக்கி வாசுதேவ் தனது மகளுக்கு திருமணம் செய்துவைத்துவிட்டு மற்றவர்களை துறவிகளாக்குவது ஏன்? என 2 மகள்களை மீட்டுத் தரக்கோரி கோவையை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர் மோடி மூன்றாவது ஆட்சிக்காலத்தில் பலவீனமாகியிருப்பதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து. மேலும், 9 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதிராக வந்தால் அரசு கவிழக்கூடும் என ஆரூடம்.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாத மத்திய அரசால் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை எப்படி தள்ளுபடி செய்ய முடிகிறது? என ஹரியானாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ராகுல் காந்தி கேள்வி.
ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து தெற்கு லெபனானில் தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்.
அதிவேகமாக 50, 100, 150, 200 மற்றும் 250 ரன்கள் குவித்து அசத்தல்.வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி புதிய வரலாறு.