செந்தில் பாலாஜி - மு க ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின் புதிய தலைமுறை
இந்தியா

காலை தலைப்புச் செய்திகள்: மீண்டும் அமைச்சரான செந்தில் பாலாஜி முதல் ‘துணை முதல்வர்’ உதயநிதி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மீண்டும் அமைச்சரான செந்தில் பாலாஜி முதல் பாகிஸ்தானில் வெடித்த போராட்டம் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு மூன்று சட்டங்களை கொண்டுவருவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள்
    வெளியாகியுள்ளன.

  • மீண்டும் அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை ஒதுக்கீடு. கோவி செழியனுக்கு உயர்கல்வியும், சுற்றுலாத்துறை ராஜேந்திரனுக்கும், சிறுபான்மையினர் நலத்துறை நாசருக்கும் வழங்கப்பட்டது. இவர்களோடு, தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

  • “எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் நிறைவேற்றுவேன்” என அறிவுரை வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி உறுதி.

  • “தாயுமானவரான முதலமைச்சருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி” என அமைச்சர் செந்தில் பாலாஜி உருக்கம். மேலும், “பல நூறு ஆண்டுகள் தவம் செய்தாலும் உன்னதமான அன்பைப் பெற இயலுமா?” என்றும் பதிவு.

  • சேலம் நகைக்கடை வியாபாரியை கர்நாடகாவில் வழிமறித்து கொள்ளையடித்து, ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் 350 கிலோ வெள்ளி கட்டிகளை தூக்கிச் சென்றவர்களுக்கு போலீஸ் வலை வீச்சு.

  • திருப்பூரில் மேலும் 3 வங்கதேச இளைஞர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்ததால் காவல் துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

  • நாகை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மீன்பிடிப்பதில் மோதல் ஏற்பட்டதில் ஏற்பட்ட தகராறில் சண்டையிட்டுக் கொண்டதால் பரபரப்பு.

  • மகாராஷ்டிராவில் 11,200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுடி, நிறைவடைந்த திட்டங்களையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

  • அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் விமர்சனம்.

  • ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம். காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் போர்க்களமானது.