சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றம். இதற்கு, அதிமுக மட்டுமின்றி, திமுக கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாமக்கல்லில் சினிமா பாணியில் நடந்த என்கவுன்ட்டர், கேரள ஏடிஎம்களில் கொள்ளையடித்த பணத்துடன் கண்டெய்னர் லாரியில் வந்த கும்பலை பிடித்த தமிழக காவல்துறை.
நாமக்கல் அருகே மடக்கிப் பிடிக்கப்பட்ட கண்டெய்னர் லாரியில் இருந்து 67 லட்சம் ரூபாய் பறிமுதல். இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக தமிழ்நாடு வந்தது கேரள காவல்துறை.
என்கவுன்ட்டர் சம்பவங்களின் பின்னணி ஒரேமாதிரியாக உள்ளதால் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
இயற்கை விவசாயத்துக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற மூதாட்டி பாப்பம்மாள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 108ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
பாப்பம்மாளின் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி இரங்கல் பதிவு. மேலும், தனது இறுதிமூச்சு வரையில் சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகளை செய்தவர் என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்.
மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், கூட்ட அரங்கைவிட்டு வெளிவந்த பின்னரும் ஒருவரை ஒருவர் தாக்க முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் 5ஆவது முறையாக பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.
திருப்பதி லட்டு விவகாரத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடவுளுடன் விளையாடுகிறார் என ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றச்சாட்டு.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரை குறி வைத்து நடத்திய தாக்குதலில் அவரது மகள் உயிரிழந்ததாக தகவல்.