இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

Headlines | குஜராத் வெள்ளத்தில் சிக்கிய தமிழக பக்தர்கள் முதல் திமுக ஒன்றிய பொருளாளர் கொலை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, குஜராத் வெள்ளத்தில் தமிழக பக்தர்கள் சென்ற பேருந்து முதல் கொலை செய்யப்பட்ட திமுக ஒன்றிய பொருளாளர் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அச்சந்திப்பில், தமிழகத்துக்கான நிதியை விடுவிக்கக்கோரி மனு அளிக்க திட்டம்.

  • புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு. தொடர்ந்து, கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் செந்தில்பாலாஜி.

  • அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய் வழக்கு தொடரப்பட்டதாக செந்தில் பாலாஜி புகார். இந்நிலையில், நிரபராதி என நிரூபித்துக் காட்டுவேன் என புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி.

செந்தில் பாலாஜி
  • செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுமா? என கேள்வி எழுந்தநிலையில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல்.

  • குஜராத் வெள்ளத்தில் தமிழக பக்தர்கள் 55 பேர் சென்ற பேருந்து சிக்கியது .இந்நிலையில், பாவ்நகர் அருகே தரைப்பாலத்தை கடந்தபோது சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்.

  • தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய வரம்பை உயர்த்தியது மத்திய அரசு. இந்நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு.

  • எம்பாக்ஸ் தடுப்பு பணிகளை வலுப்படுத்தக் கோரி மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம். மேலும், மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தல்.

  • திண்டுக்கல் அருகே திமுக ஒன்றிய பொருளாளரை வெட்டிக் அரிவாளால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

  • தென்காசி அருகே இரு சமூகத்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் , 4 பேருக்கு மரண தண்டனை விதித்தது நெல்லை சிறப்பு நீதிமன்றம்.

நெல்லை சிறப்பு நீதிமன்றம்
  • நீதிமன்ற உத்தரவையடுத்து உளுந்தூர்பேட்டை அருகே கோயிலுக்கான கட்டடத்தை இடிக்கச் சென்ற அதிகாரிகள். இந்நிலையில், எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாமியாடியதால் பரபரப்பு.

  • சென்னை துறைமுகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல். இந்நிலையில், இருவரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை.

  • திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசுப்பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதில், வாகனம் முற்றிலும் சேதமடைந்தது.இந்நிலையில், நல்வாய்ப்பாக பயணிகள் உயிர்தப்பினர்.

  • குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

  • திருப்பதி லட்டு தொடர்பாக, பரிதாபங்கள் யூடியூப் சேனல் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், இருவர்கள் மன்னிப்பு கேட்ட நிலையிலும், கோபி, சுதாகர் மீது ஆந்திர டிஜிபியிடம் தமிழக பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி புகார் அளித்துள்ளனர்.

  • இந்தியா - வங்கதேசத்துக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம். கான்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற இந்திய வீரர்கள் முனைப்பு.

  • ஹிஸ்புல்லா அமைப்பு மீது இடைவிடாமல் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் அறிவிப்பு. இந்நிலையில்,தாக்குதலை 3 வாரங்களுக்கு நிறுத்த ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை விடுத்தும் அதனை நிராகரித்தார் நெதன்யாகு.