இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

தலைப்புச் செய்திகள் | ஜாமீனில் வந்த சவுக்கு சங்கர் முதல் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அனுமதி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஜாமீனில் வெளிவந்த சவுக்கு சங்கர் முதல் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அனுமதி கிடைத்தது வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • சென்னை மாநகரில் நேற்று இரவு வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கி, இரவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  • குறுகிய நேரத்தில் கொட்டி தீர்த்த மழையால் பெரம்பூர் சுரங்கப்பாதை மூழ்கியது. மேலும், பட்டாபிராம் சுரங்கப்பாதையிலும் தண்ணீர் சூழ்ந்ததால் அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டன.

  • சென்னை புறநகர் பகுதிகளையும் புரட்டிப் போட்ட கனமழை... அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட இடங்களில் 10 சென்டி மீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளது.

மழை
  • திருவள்ளூரில் இடி, மின்னலுடன் நள்ளிரவு வரை தொடர்ந்த மழையால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; மக்கள் அவதியடைந்தனர்.

  • விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு 17 நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கியதுள்ளது காவல்துறை.

  • ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுப்பு. இந்நிலையில், விதிமுறைகளுக்கு ஒத்துவராததால் அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்.

  • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பிணை கோரிய வழக்கில், இன்று தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்.

  • செஸ் ஒலிம்பியாட்டில் வாகை சூடிய இந்திய வீரர்களை நேரில் வாழ்த்திய பிரதமர் மோடி வீரர், வீராங்கனைகளுடன் உற்சாகமாக கலந்துரையாடினார்.

  • பாடும் நிலா பாலுவுக்கு பெருமை சேர்த்த தமிழ்நாடு அரசு. இந்தவகையில், நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவுக்கு எஸ்பிபி பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

#JUSTIN | சாலைக்கு எஸ்பிபி பெயர்- முதலமைச்சருக்கு எஸ்பிபி சரண் நன்றி
  • போலி பத்திர பதிவு புகாரில் சிபிசிஐடி சேலம் பத்திர பதிவுத்துறை டிஐஜியை கைது செய்துள்ளது.

  • உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுவிப்பு. இந்தநிலையில், தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் துளியும் இல்லை என ஆவேசமாக பேசியுள்ளார் சவுக்கு சங்கர்.

  • சிவகாசியில் லாரி குடோனில் பட்டாசு வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கருகி சேதம்.

  • பெங்களூருவில் பெண் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி ஒடிசாவில் தூக்கிட்டு தற்கொலை என காவல்துறை தகவல்.

  • லெபனான் நாட்டில் உள்ள இந்தியர்கள் வெளியேற உத்தரவு. ஏனெனில், இஸ்ரேல் - ஹிஸ்புல்லா அமைப்பு இடையே மோதல் வலுக்கும் சூழலில், இருப்பதாக இந்திய தூதரகம் அறிவுறுத்தல்.