ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள், பழங்கள் விலை அதிகரித்த போதும் ஆர்வமுடன் வாங்கிச்சென்ற மக்கள். இந்தவகையில், வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
குஜராத்தில் அம்மன் உருவத்தில் மகா ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றதில், கர்பா நடனமாடி இளைஞர்கள் அசத்தல்.
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளை திறக்க உத்தரவு. மேலும், விஜயதசமி அன்று அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு.
மறைந்த முரசொலி செல்வத்தின் உடல் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அவர் உடலை கண்டதும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முரசொலி செல்வம் உடலுக்கு தலைவர்கள், கட்சித்தொண்டர்கள் மரியாதை. ஓ.பன்னீர்செல்வம், தமிழிசை, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி.
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஆயிரக்கணக்கானோர் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கனமழையால் புதுச்சேரி மருத்துவமனையில் புகுந்த மழைநீர். புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு. மேலும், வரும் 14ஆம் தேதி சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்.
இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான வர்த்தகம் இரு மடங்கு அதிகரித்துள்ளது என லாவோஸில் நடந்து வரும் தென்கிழக்காசிய நாடுகள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்.
மாநிலங்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான வரிப்பகிர்வை விடுவித்தது மத்திய அரசு.இந்தவகையில், தமிழகத்திற்கு 7 ஆயிரத்து 268 கோடி ரூபாய் விடுவிப்பு.
டெல்லியில் 200 கிலோ கொகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தது சிறப்பு காவல் பிரிவு. இது சர்வதேச சந்தையில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு என தகவல்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை புரட்டிப் போட்ட மில்டன் புயல். கனமழை, நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு.
இருபத்தி இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் ஓய்வு. இந்நிலையில், டேவிஸ் கோப்பை இறுதிப்போட்டியே தன் கடைசி ஆட்டம் என்றும் அறிவிப்பு.
சென்னை ரோகினி திரையரங்கில் வேட்டையன் திரைப்படத்தை ரசித்த லதா ரஜினிகாந்த். சிகிச்சைக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் நலமாக இருப்பதாகவும் பேட்டி.