கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது வருகிறது. 50-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஷச்சாராய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமூகத்தை பாழ்படுத்தும் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. விஷச்சாராயத்தை விற்ற வியாபாரி கண்ணுக்குட்டி மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ. வேலு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் உறுதி அளித்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
நாடு முழுவதும் நடந்து முடிந்த நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முறைகேடு புகார் எழுந்துள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி. சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாளை ஸ்ரீநகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதால் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டி20 உலகக்கோப்பையில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா. சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.