nilgiri tahr pt web
இந்தியா

வரையாடு தினம்|சங்ககாலம் தொட்டே இலக்கியங்களின் ”பா” க்களில் இடம்பெற்ற வரையாடு.. முக்கியத்துவம் என்ன?!

தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், இன்று வரையாடுகள் தினம் கொண்டாடப்படுகிறது.

PT WEB

- செய்தியாளர் கார்த்திகா

தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், இன்று வரையாடுகள் தினம் கொண்டாடப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் முக்கூர்த்தி மற்றும் வால்பாறை வனப்பகுதிகளில் வரையாடுகள் காணப்படுகின்றன. கேரளாவிலும் குறிப்பிட்டளவு வரையாடுகள் உள்ளன. அழிவின் விளிம்பில் உள்ள இந்த வரையாடுகளை பாதுகாக்க கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆண்டுதோறும் அக்டோபர் 7ஆம் தேதி வரையாடுகள் தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது.

nilgiri tahr

வரையாடுகளின் வாழ்விடங்களை பாதுகாக்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. 2015ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகம் மற்றும் கேரளாவில் 3 ஆயிரத்து 122 வரையாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் ஒருங்கிணைந்த வரையாடுகளின் கணக்கெடுப்பு பணிகள் தமிழக மற்றும் கேரளாவில் நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் முடிவுகள் இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரையாடுகளுக்கு அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தின் காரணமாக அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

நீலகிரி வரையாடுகள், தமிழகத்தின் விலங்கு மட்டுமல்ல, மேற்கு தொடர்ச்சி மலையின் சிறப்பு மிக்க காட்டுயிர். காட்டாடு இனத்திலேயே மிகவும் பெரிய உடலமைப்புக் கொண்டவை. இந்தியாவில் அதிகம் அறியப்பட்ட இமாலய காட்டாட்டை விட வரையாடுகள் சற்று பெரியவை. ஆண் வரையாடுகள் பெண் வரையாடுகளை காட்டிலும் இரு மடங்கு உடல் எடையுள்ளவை. கடல் மட்டத்திலிருந்து 1,200 முதல் 2,600 மீட்டர் உயர்ந்த மலைமுகடுகளிலுள்ள புல்வெளிகளே வரையாடுகளின் வாழிடமாகும்.

அதனால்தான் இந்த ஆடுகளுக்கு மேற்குத்தொடச்சி மலை மிகச்சிறந்த இடமாக உள்ளது. 6 முதல் 150 ஆடுகள் குழுக்களாக இணைந்து வாழுகின்றன. பார்த்தல், கத்துதல், நுகர்தல் ஆகிய உத்திகளை தகவல் தொடர்பிற்கு இவை பயன்படுத்துகின்றன. இந்தவிலங்குகள் மிகவும் கூரிய பார்வையுடையவை.

nilgiri tahr

மேலும், எதிரிகளை மிக அதிக தொலைவிலிருந்து கூட வரையாடுகளால் கண்டுபிடிக்க இயலும். இந்தியாவில், சுமார் 3ஆயிரம் வரையாடுகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக, கேரளாவிலும், தமிழகத்திலும் வரையாடுகள் அதிகம் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் ஆனைமலை, மேகமலை, முக்கூர்த்தி மலைகள், நீலகிரி மலைகள், வால்பாறை, ஆழியார் மலைகள், ஸ்ரீவில்லிபுத்தூரில் வரையாடுகள் வசிக்கின்றன. மேலும், கேரளாவில் இரவிக்குளம் தேசிய பூங்கா, மூணார், அகத்திய மலைகளிலும் வரையாடு காணப்படுகிறது.

பண்டைய தமிழ் இலக்கியங்களில் வரையாட்டிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்..

1. சீவகசிந்தாமணி

ஓங்குமால் வரையாடு வரையாடுழக் கவினுடைந்துகு பெருந்தேன்' என்று சீவகசிந்தாமணியில் வரும் அடி . இதில் வரையாட்டின் பெருமையை விளக்குகிறது

2. மதுரைக் கண்டராதித்தன்

மதுரைக் கண்டராதித்தனின் பாடலில் வரையாடு நெல்லிக்காய் உண்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

புரி மட மரையான் கருநரை நல் ஏறு

தீம் புளி நெல்லி மாந்தி, அயலது

தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து,

ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன்

நம்மை விட்டு அமையுமோ மற்றே-கைம்மிக

வட புல வாடைக்கு அழி மழை

தென் புலம் படரும் தண் பனி நாளே?

nilgiri tahr

3. நற்றிணை

வருடை என்ற சொல் வரையாட்டினைக் குறிக்கிறது.

இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும்

பல் மலர்க் கான் யாற்று உம்பர், கருங் கலை

கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும்

பெரு வரை நீழல் வருகுவன், குளவியொடு

கூதளம் ததைந்த கண்ணியன்; யாவதும்

முயங்கல் பெறுகுவன் அல்லன்; ( 119)

உடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின்,

கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை

வாடலகொல்லோ தாமே-அவன் மலைப்

போருடை வருடையும் பாயா,

சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே? (359. குறிஞ்சி)

4. ஐங்குறுநூறு

நெடு வரை மிசையது குறுங் கால் வருடை

தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட!

வல்லை மன்ற பொய்த்தல்;

வல்லாய் மன்ற, நீ அல்லது செயலே. (287)

nilgiri tahr

5. பட்டினப்பாலை

மழை ஆடு சிமைய மால் வரைக் கவாஅன்

வரை ஆடு வருடைத் தோற்றம் போலக்

கூர் உகிர் ஞமலிக் கொடும் தாள் ஏற்றை

ஏழகத் தகரொடு உகளும் முன்றில் (126-141)

பதிற்றுப் பத்து

ஆவிக் கோமான் றேவி யீன்றமகன்

தண்டா ரணியத்துக் கோட்பட்ட வருடையைத்

தொண்டியுட் டந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்கு (ஆறாம் பத்து - பதிகம் )

6. பரிபாடல்

உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,

வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி

புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்