இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய காலை தலைப்புச்செய்திகள்|பிரதமர் மோடியின் தமிழகவருகை To கொல்கத்தா அணியை ஊதித்தள்ளி CSK வெற்றி!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது பிரதமரின் தமிழக வருகை முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • சென்னையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று வாகன பேரணி நடைபெறவுள்ளதால், தியாகராய நகர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

  • பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பிற்பகல் 3 மணி முதல் தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • ஒவ்வொரு சமூகத்துக்கும் இடையே சித்தாந்த வேறுபாட்டை ஏற்படுத்தி சண்டையை உருவாக்குகிறது பாஜக என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

  • நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் பரப்புரை மேற்கொள்வதாக குற்றச்சாட்டினை முன்வைத்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.

  • கடற்படை பிரிவை உருவாக்கிய சோழர்கள் ஆண்ட மண்ணில் நிற்பது பெருமை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திருவாரூரில் பரப்புரை மேற்கொண்டார்.

  • சாதிவாரி கணக்கெடுப்பு கேட்கும் பாமக, மனுநீதி பேசும் பாஜகவுடன் வைத்தது பொருந்தா கூட்டணி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

  • குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்த அதிமுக, இஸ்லாமியர்களிடம் எந்த அடிப்படையில் வாக்கு கேட்கிறது? என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனவும் வரி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இபிஎஸ் குற்றச்சாட்டு.

  • நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பானவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், பிரதமர், அண்ணாமலை பேச மறுப்பது ஏன் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

  • ஜனநாயகத்தை காக்க வேண்டிய சூழல் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.எனவே, ஜனநாயகமா?... பாசிசமா? என்ற போர்க்களத்தில் நிற்கிறோம் என்று வைகோ ஆதங்கம்.

  • மத்திய அரசிடம் இருந்து தாம் பெற்று வந்த திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

  • சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தருமபுரியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

  • அதிமுகவை சின்னாபின்னமாக்கவே டிடிவி தினகரன் போட்டியிடுகிறார் என தேனி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் விமர்சனம்.

  • ஒட்டன்சத்திரம் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட 80 லட்ச ரூபாய் உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

  • தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தாலும் ஜூன் 4 வரை பணம் எடுத்துச்செல்ல கட்டுப்பாடு தொடரும். ஆகவே, 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து செல்ல முடியாது என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

  • மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 10 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு. வரும் 17, 18ம் தேதிகளில் சென்னையில் இருந்து இரண்டாயிரத்து 970 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

  • திருப்பூர் அருகே சாலை வசதி இல்லாமல் தவிக்கும் மலைகிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் மக்களவை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

  • இளங்கலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் வாய்ப்பாக இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

  • வடலூர் சத்திய ஞான சபை முன்புள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து கட்டுமானப் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி மக்கள் போராட்டம்.

  • மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது.

  • மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் .

  • அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டுவசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கும் தடை விதித்தது உச்சநீதிமன்றம்.

  • சிபிஐ, என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை தலைமைகளை மாற்றக்கோரி தேர்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தநிலையில், தர்ணாவில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.

  • வட அமெரிக்க நாடுகளில் நிகழ்ந்த நடப்பாண்டுக்கான முழு சூரிய கிரகணத்தினை அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளை சேர்ந்தவர்கள் கண்டுகளித்தனர்.

  • கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி.