இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

தலைப்புச் செய்திகள்| சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை To தமிழ்நாட்டில் வெளுத்துவாங்கிய கனமழை!

PT WEB
  • சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம். மேலும், காவிரி உரிமையை அனைத்து விதத்திலும் தமிழக அரசு நிலைநாட்டும் என அமைச்சர் துரைமுருகன் விளக்கம்.

  • டெல்லியில் இன்று கூடுகிற காவிரி மேலாண்மை ஆணையத்தில், சிலந்தி ஆற்றில் தடுப்பணை, காவிரி நீர் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப தமிழ்நாடு அரசு திட்டம்.

  • தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணிப்பு.

  • தமிழ்நாட்டின் பல இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவமனை மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி.

  • திருநள்ளாறு கோயிலில் பிரமோற்சவ விழா கோலாகலம்.இந்நிலையில், தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளிய சனீஸ்வர பகவானை தரிசித்த பக்தர்கள்.

  • 5-ஆம் கட்ட மக்களவை தேர்தலில் 60 புள்ளி பூஜ்ஜியம் ஒன்பது விழுக்காடு வாக்குப்பதிவு என இந்திய தேர்தல் ஆணையம் தகவல்.

  • புரி ஜெகநாதர் கோயில் சாவி 6 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது என தேர்தல் பரப்புரையில் வி.கே. பாண்டியனை மறைமுகமாக தாக்கினார் பிரதமர் மோடி.

  • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு சர்வதேச தலைவர்கள் இரங்கல்.இந்நிலையில், இடைக்கால அதிபராக முகமது மொக்பர் நியமனம்.

  • ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறப் போவது யார்?. முதல் குவாலிஃபயர் போட்டியில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை.