நான்காம் கட்ட மக்களவைத் தேர்தலில் 67.25 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் மேற்கு வங்கம், ஆந்திராவில் 78 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது.
பீகார் முன்னாள் துணை முதல்வர் சுசில் மோடி காலமானார். இந்நிலையில், குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மும்பையை நிலைகுலையச் செய்த புழுதிப் புயல் இரும்புப் பதாகை விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு. மேலும், 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி.
“57 ஆண்டுகளாக ஏமாந்தது போதும்” என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆவேசம். இந்நிலையில், தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து கொடுக்கும் நிலைக்கு மாற வேண்டும் எனவும் சூளுரைத்துள்ளார்.
அண்ணாமலை மீதான கிரிமினல் வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை எந்த தகவலும் வெளியிடவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டநிலையில், வழக்கு தொடர அனுமதி தரவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று வெளியாகிறது 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள். இது குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் முடிவுகளை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
காசாவில் இன அழிப்பு நடைபெறுவதாக கருதவில்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கருத்து.
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது பிசிசிஐ. இந்நிலையில், வரும் 27ஆம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம் என அறிவிப்பு.