இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைப்பெறவுள்ளது.
விவிபேட் இயந்திரங்களில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை முழுவதுமாக எண்ணக்கோரிய வழக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் இன்று வெளியிட வாய்ப்பு.
வாக்குவங்கி அரசியலுக்காக நாட்டை பிளவுபடுத்துகிறது காங்கிரஸ் என சத்தீஸ்கர் பரப்புரையில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
நாட்டிற்காக தாலியை தியாகம் செய்தவர் தனது தாய் என காங்கிரஸ் பெண்களின் தாலியை பறித்ததாக பிரதமர் பேசியதற்கு பிரியங்கா காந்தி பதில்.
தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாது அணை கட்ட முடியாது என தமிழக பாஜக தெளிவாக இருப்பதாக அண்ணாமலை விளக்கம்.
கேரளாவில் இந்தியா கூட்டண முழுமையாக வெற்றிபெறும் என வயநாட்டில் பரப்புரை மேற்கொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை நம்பிக்கை.
கேரளாவில் பரவி வரும் பறவைக்காய்ச்சல் எதிரொலியால் தமிழக எல்லைகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சித்ரா பௌர்ணமியையொட்டி விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை.. கிரிவலம் செல்வதற்காக குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கும் பணி தீவிரம்.
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத்திருவிழா கோலாகலம். மணப்பெண் கோலத்தில் அரவானை கணவனாக ஏற்று தாலிக்கட்டிக்கொண்ட திருநங்கைகள்.
முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரில் கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியின் முன்னாள் நடனப் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏஐ தொழில்நுட்பத்தால் யுபிஎஸ்சி வினாத்தாள்களை மாநில மொழிகளுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை.
தமிழ்நாட்டில் பள்ளித்தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை தொடங்கியது .ஆனால், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
நாட்டில் பரவலாக வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்குவங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கையும், தமிழ்நாடு, ஒடிசா, கர்நாடகத்திற்கு மஞ்சள் அலெர்ட்டும் விடப்பட்டுள்ளது.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடைப்பெற்றதில், தமிழக விவசாயிகள் - காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் காவல் மே 7 வரையும், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் காவலையும் நீட்டித்தது டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார் பவன் கல்யாண்.இதில், ஆயிரக்கணக்கான ஜனசேனா தொண்டர்களுடன் பேரணியாக சென்று மனுத்தாக்கல்.
பதஞ்சலி நிறுவனத்தை மீண்டும் கடிந்துகொண்ட உச்சநீதிமன்றம் மன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு சிறியது என காட்டம்.
பனிமழையால் வெண்போர்வை போர்த்தியதுபோல் மாறிய பின்லாந்து ஹெல்சின்கி (HELSINKI) நகரம் 20 செண்டி மீட்டருக்கு மேல் பெய்த பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்.
ஹமாஸ் வசமுள்ள பிணைக்கைதிகளை மீட்க எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றச்சாட்டு. இந்நிலையில், இஸ்ரேலில் ரத்த கரையுடன் கைகளில் கயிறு கட்டி பொதுமக்கள் போராட்டம்.
ஐபிஎல் போட்டியில் மோசமான ஃபீல்டிங் காரணமாக வெற்றியை கோட்டைவிட்ட சிஎஸ்கே அணி. அதிரடி சதம் விளாசிய லக்னோ வீரர் ஸ்டாய்னிஸ் ஆட்டநாயகனாக தேர்வு.
ஐபிஎல் தொடரில் குஜராத் - டெல்லி அணிகள் இன்றிரவு பலப்பரீட்சை ப்ளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வெற்றி முக்கியம் என்பதால் இருஅணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சி.
மஞ்ஞுமல் பாய்ஸ் பட நடிகரை இன்று கரம்பிடிக்கிறார் அபர்ணா தாஸ். இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல்.