இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | வைகையில் இறங்கிய கள்ளழகர் முதல் ரஜினியின் ‘கூலி’ டீசர் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையில் இறங்கியது முதல் ரஜினிகாந்தின் 171வது திரைப்படத்தின் பெயர் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • தங்க குதிரை வாகனத்தில் வைகையில் இறங்கினார் கள்ளழகர். இந்நிலையில், தண்ணீரை பீய்ச்சி அடித்து பக்தர்கள் உற்சாகத்தில் மகிழ்ந்தனர்.

  • கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டிய மிஸ் கூவாகம் 2024 போட்டியில், ஈரோட்டை சேர்ந்த திருநங்கை ரியா பட்டம் வென்று அசத்தல்.

  • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் செல்வங்களை ஊடுருவல்காரர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்து விடுவார்கள் என பிரதமர் பேசிய விவகாரத்தில், எந்த பிரதமரும் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியதில்லை என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

காங்கிரஸ் - பாஜக
  • பிரதமர் மோடியின் நச்சுப்பேச்சு மிகவும் மோசமானது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம். இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலையை கைவிட்டுவிட்டதாக காட்டம்.

  • டெல்லியில் 2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவம் செய்தார்.

  • ஒரு மாதத்தில் 2 முறை நிலநடுக்கத்தை சந்தித்த தைவானில், ஒரே இரவில் 80 முறை நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்.

  • கனடாவில் ஓடும் சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதில், பெட்டிகளில் இருந்த ஏராளமான கார்கள் சேதமடைந்தனர்.

  • ஐபிஎல் லீக் சுற்றில் மும்பை அணிக்கு மற்றொரு தோல்வியை தழுவியது. மேலும், ஜெய்ஸ்வால் சதத்தால் 7-வது வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் அணி.

  • லக்னோ அணியை பழிதீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்? சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு பலப்பரீட்சை நடைப்பெறுகிறது.

  • ரஜினிகாந்தின் 171வது திரைப்படத்திற்கு கூலி என பெயரிட்டது படக்குழு. இந்நிலையில், அதிரடி சண்டைக் காட்சிகளுடன் டைட்டில் டீசர் வெளியீடப்பட்டுள்ளது.