இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள சக்திவாய்ந்த பெரிய மனிதர்கள் என்னை ஆட்சியிலிருந்து நீக்க கைகோர்த்துள்ளனர் என கர்நாடாகாவில் பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடி பேச்சு..
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் ஒரேமேடையில் பரப்புரை நடத்தினர். களத்தில் இருந்து புதிய தலைமுறையின் நேரடி ரிப்போர்ட் வழங்கியது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஏன் பாரதிய ஜனதாவை தாக்குவதில்லை..? என திருவனந்தபுரத்தில் பரப்புரை செய்த பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு, வாக்காளர் மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களால் 11 வாக்குப்பதிவு மையங்களில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கர்நாடகா துணைமுதல்வர் டி.கே. சிவக்குமார் மீது வழக்குப் பதிவு. வாக்குகளுக்கு பேரம் பேசுவது போன்ற வீடியோ வெளியான நிலையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததால் தேர்தல் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக மற்றும் காங்கிரஸ் வலியுறுத்தல்.
தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியானநிலையில், அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் முழு தரவுகள் இன்னும் வரவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்.
மக்களவை தேர்தலில் சென்னையில் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குகளை பதிவு செய்ய மாநகர வாசிகளுக்கு சுணக்கம் ஏன்?.
வாக்காளர் பெயர் நீக்கும் நடைமுறையில் வெளிப்படத்தன்மை உள்ளதாகவும், ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டுக்கு கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் துரை வைகோ பேட்டி.
சென்னை கண்ணகி நகரில் காவலர்களை தாக்கிய கஞ்சா வியாபாரி தாக்கியநிலையில், போதையில் பாட்டிலை உடைத்து தன்னை தானே தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழக -கேரள எல்லைகளில் கண்காணிப்பு ஏற்படுத்தபடுத்தப்படுகிறது. தீவிரம் கோழிகள், கோழிக் கழிவுகள் கொண்டுவரப்படுகிறதா? என வாகன சோதனை நடைப்பெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களின் கைமணத்தில் உணவு வகைகள் தயாராகும்நிலையில், ஒன்றரை லட்சம் பேருக்கு விருந்தளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திர திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதற்கு பாஜக கொள்ளையடிப்பதை தொடர விரும்புவது தெரிவதாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.
தமிழகம், பீகார் உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கடும் வெப்பம் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
கைதாவதற்கு முன்பே இன்சுலின் எடுத்துக்கொள்வதை நிறுத்திக்கொண்டார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என துணைநிலை ஆளுநருக்கு திகார் சிறை நிர்வாகம் அறிக்கை அனுப்பியுள்ளது.
டெஸ்லா கார் தொழிற்சாலை நிறுவனர் எலான் மஸ்க்கின் இந்திய வருகை ஒத்திவைக்கப்பட்டநிலையில், இந்தாண்டு இறுதியில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி டெல்லி அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது 5ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.