தலைப்புச் செய்திய்கள் புதிய தலைமுறை
இந்தியா

காலை தலைப்புச் செய்திகள் | மும்முரமாகும் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் முதல் இளையராஜா விளக்கம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது நாளை நடைபெறவுள்ள வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் முதல் வெடித்துச் சிதறிய எரிமலை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • தமிழ்நாடு, புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

  • பரப்புரை ஓய்ந்த நிலையில் தமிழகம் முழுவதும் தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வெளிநபர்கள் தொகுதியை விட்டு வெளியேற அறிவுறுத்தல்.

  • சமூக வலைதளங்கள் உட்பட எந்த விதத்திலும் கட்சிகள், வேட்பாளர்கள் பரப்புரை செய்யக்கூடாது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ புதிய தலைமுறைக்கு பேட்டி.

  • பரப்புரை ஓய்ந்ததால் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் மீறப்பட்டால் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை.

  • வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்ததால் சென்னை தாம்பரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

  • நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதிநீக்கம் செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைப்பெறுகிறது.

நயினார் நாகேந்திரன்
  • நடிகரும், வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளருமான மன்சூர்அலிகானுக்கு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

  • தமிழகத்தில் காவல் நிலைய மரணங்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாதா? என கேள்வி எழுப்பியுள்ளது. 12 நாட்களில் 4 பேர் உயிரிழந்ததற்கு மக்கள் கண்காணிப்பகம் கண்டனம்.

  • “காப்புரிமை விவகாரத்தில் எனது உரிமைதான் எல்லாவற்றிலும் மேலானது என்ற வகையில் கருத்து கூறினேன்” என இசை நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் இளையராஜா தரப்பு விளக்கம்.

இசையமைப்பாளர் இளையராஜா
  • 'திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு. உயிரிழப்புக்கு வேகத்தடை இல்லாததே காரணம் எனக்கூறி பொதுமக்கள் சாலை மறியல்.

  • “சமூகநல அதிகாரி இருக்கும்போது, குழந்தை திருமணங்களை தடுக்க எதற்காக நிரந்தர குழு?” என்று சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

  • அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நியமனத்தை எதிர்த்து திமுக எம்எல்ஏ பரந்தாமன் வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம், உயர்கல்வித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

  • சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், எமிரேட்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு பயணிகள் வாக்குவாதம்.

  • வெள்ளத்தில் சிக்கியவர்களை தனி ஆளாய் மீட்ட இளைஞரால்., வரலாறு காணாத மழையால் தத்தளிக்கும் துபாயில் தழைத்தோங்கிய மனிதநேயம்.

  • டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தே ஆட்சி நடத்த வேண்டிய வசதிகளை செய்து தர வலியுறுத்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • ஹைதராபாத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதால் தகராறு ஏற்பட்டதில், 2 கிலோ மீட்டர் தூரம் பைக்கை இழுத்துச் சென்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • தேர்தல் நடைபெறும் கூச் பெஹார் தொகுதிக்கான சுற்றுப்பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என மேற்குவங்க மாநில ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்.

  • ஜப்பானின் புங்கோ நகரில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்துவிட்டனர். மேலும், இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை.

  • ருயாங் தீவில் எரிமலை வெடித்துச் சிதறியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் குஜராத் அணியை எளிதில் வென்றது டெல்லி அணி. 8 புள்ளி 5 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து அசத்தல்.

  • ஐபிஎல் தொடரில் மும்பை - பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை நடைப்பெறவுள்ள நிலையில், தோனிக்கு பிறகு 250 ஆவது போட்டியில் களமிறங்குகிறார் ரோகித் சர்மா.

  • டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் - கோலி களமிறங்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்.