தலைப்புச் செய்திகள் puthiya thalaimurai
இந்தியா

காலை தலைப்புச் செய்திகள் | தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி முதல் வாணவேடிக்கை காட்டிய மும்பை அணி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, அரியலூரில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறை உறுதிசெய்தது முதல் வெப்பம் குறித்து ஐ.நா.விடுத்த எச்சரிக்கை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • அரியலூர் மாவட்டம் செந்துறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தது வனத்துறை. ஆகவே, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டது.

  • தேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழ்நாடு வருகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி. கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பங்கேற்கிறார்.

  • மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் இன்று தமிழகம் வருகை தரவுள்ளனர். மதுரை, கோவை, தஞ்சை பகுதிகளில் 2 நாட்கள் வாக்கு சேகரிக்கத் திட்டம்

  • தமிழக மக்கள் ஒரு தொகுதியில்கூட பாஜகவை வெற்றிபெற வைக்க மாட்டார்கள் என நெல்லை மேலப்பாளையத்தில் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி பேச்சு.

  • ”ஆட்சிக்கு வந்து எந்தவொரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை. 3 லட்சம் கோடி ரூபாய் கடனை மட்டும் வாங்கியுள்ளது” என திருவண்ணாமலை பரப்புரை கூட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு

  • திமுகவும், எடப்பாடி பழனிசாமியும் கள்ளக்கூட்டணி வைத்திருப்பதாகவும்,யார் பச்சோந்தி என்று தமிழ்நாட்டு மக்களுக்கே தெரியும் என்றும் டிடிவி தினகரன் விமர்சனம்.

டிடிவி தினகரன்
  • ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை கொடுத்துவிட்டு, 5 ஆயிரம் முறை திமுகவினர் சொல்லிக் காண்பிக்கின்றனர் என சேலம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை

  • சென்னை அசோக்நகரில் ஆட்டோவில் சென்று வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் தமிழிசை. ஆட்சியாளர்களை ஆட்டம் காண வைக்கவே ஆட்டோவில் பயணம் என பேட்டி.

  • புதுக்கோட்டை மாவட்ட மீனவ கிராமங்களில் பலாப்பழம் சின்னத்தை சொல்லச் சொல்லி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை.

  • அண்ணா சொன்னதைப் போன்று தெற்கு இன்றும் தேய்கிறது என மதுரையில் சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை.

மதுரையில் சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை
  • திராவிடக் கட்சிகளை அகற்றுவதற்கான அடித்தளமே இந்த தேர்தல் என சேலத்தில் பாமக வேட்பாளர் அண்ணாதுரைக்கு வாக்கு சேகரித்த அன்புமணி ராமதாஸ்.

  • தமிழ்நாட்டிற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், நாட்டைக் காப்போம் என்று முதல்வர் பேசி வருகிறார் என நெல்லையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை.

  • ஆ.ராசாவின் தேர்தல் செலவுகளை குறைத்துக்காட்ட கூறுவதாக நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி மீது குற்றச்சாட்டு. உதவி செலவின பார்வையாளர் புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என சத்யபிரதா சாகு விளக்கம்.

  • கூடலூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகி வீட்டில் 28 மணி நேரம் வருமான வரி சோதனை செய்யப்பட்டதில், 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்.

  • மதுரை அவனியாபுரத்தில் காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதில், காதலியின் தந்தை மற்றும் சகோதரரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • அழகி படத்தில் பிரபலமாகி 90-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் அருள்மணி திடீர் மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

நடிகர் அருள்மணி
  • அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கவிதாவை சிபிஐயும் கைது செய்தது. இந்நிலையில் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் திட்டம்.

  • 2007 ஆம் ஆண்டு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளரை திடீரென பணி நீக்கம் செய்தது ஊழல் கண்காணிப்பு இயக்குநரகம்.

  • மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு உயர்கிறதா செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள்? ஜூலை மாதத்திற்குப் பிறகு 15 முதல்17 சதவீதம் வரை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.

  • கோடைக்காலத்தை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுவரும் நிலையில், காட்டுத்தீ, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு.

  • கடும் வெப்ப அலையால் 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்படக்கூடும் என இந்தியா உட்பட கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஐ.நா. எச்சரிக்கை.

  • ஸ்விட்சர்லாந்து உச்சிமாநாட்டில் போர் நிறுத்தம் குறித்து பேசப்படும் என கூறப்பட்ட நிலையில், உக்ரைனை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என ரஷ்ய அதிபர் விளக்கம்.

  • பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் FOUR, சிக்சர் என வாணவேடிக்கை நிகழ்த்திய மும்பை அணி வீரர்கள். இதனால் ஐபிஎல் லீக் போட்டியில் 5வது தோல்வியை தழுவியது பெங்களூரு அணி.

MI vs RCB
  • ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் ஏமாற்றமளித்த இந்திய வீரர், வீராங்கனைகள்... காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரனாய், பி.வி.சிந்து தோல்வி.

  • துல்கர் சல்மான் நடித்துள்ள "லக்கி பாஸ்கர்" படத்தின் டீசர் வெளியான நிலையில், ஜூலை மாதம் படம் வெளியாகும் என அறிவிப்பு.