மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லியை வென்று மகுடம் சூடியது பெங்களூரு அணி. இதன்மூலம், ஈ சாலா கப் நமதே என்ற ரசிகர்களின் 17 வருட கனவு நிறைவேறியது.
கோப்பை வென்ற பெங்களூரு மகளிர் அணிக்கு விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், இதயப்பூர்வ வாழ்த்துகள் என அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா ஆகியோர் வாழ்த்து.
அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமானவரித்துறை மூலம் மத்திய அரசு மிரட்டுவதாக நியாய யாத்திரை நிறைவு விழாவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவதே இந்தியா கூட்டணியின் இலக்கு என மும்பையில் நடைபெற்ற பொதுக்கட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
6ஆவது முறையாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடியின் வாகன பேரணியையொட்டி கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திர விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்தது இந்திய தேர்தல் ஆணையம். அதில், அதிகபட்சமாக 6,986 கோடி ரூபாயை பாஜக பெற்றுள்ளது. திமுக 656 கோடி ரூபாய் நன்கொடையையும் பெற்றுள்ளது.
லாட்டரி மார்ட்டின் நிறுவனம் மட்டும் 509 கோடி ரூபாய் வழங்கி இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ள நிலையில், சூதாட்ட நிறுவனத்திடம் திமுக பணம் பெற்றுள்ளது வெட்கக்கேடானது என அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜகவை காப்பாற்றுவதே எடப்பாடி பழனிசாமியின் நோக்கம் எனவும் திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொண்டுள்ளதாகவும் டி.ஆர். பாலு பதிலடி அளித்துள்ளார்.
தேர்தல் பத்திரம் என்ற பெயரில் நிறுவனங்களை மிரட்டி பாஜக வசூல் செய்துள்ளது எனவும், பிரதமரின் பயணத் திட்டத்திற்கு ஏற்ப தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதம் எழுதியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டி பணம் பறிக்கும் மோசடி அரங்கேறிவருகிறது. ஆகவே,பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தல்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததன் எதிரொலியாக தமிழ்நாட்டில் இதுவரை இரண்டரை கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக போட்டியிடும் தொகுதிகள் இன்று இறுதி செய்யப்பட வாய்ப்பு. மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களின் பெயர்களும் வெளியாகும் என எதிர்பார்ப்பார்க்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் இணையுமா தேமுதிக, பாமக.. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகிறது.
சிக்கிம், அருணாசலப் பிரதேச மாநிலப் பேரவைத் தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால், ஜூன் 2ஆம் நாள் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
ஆந்திராவில் ஆபத்தை உணராமல் விளக்கு கோபுரத்தில் ஏறிய தொண்டர்களை நோக்கி பாதுகாப்பாக கீழே இறங்கக் கூறிய பிரதமர் மோடி.
கொடைக்கானலில் நான்கு நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயால் ஏற்படும் புகைமூட்டத்தால் மலை கிராமப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
கோவை அருகே நகர்ப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால், ஒருவர் காயம்.
மேற்குவங்கத்தில் அமலாக்கத்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், 3 பேரை கைது செய்தது சிபிஐ.
கர்நாடகா மாநிலம் மாதேஸ்வரன் மலைக் கோயிலில் பெரிய தேரோட்ட நிறைவு விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ரஷ்ய அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 88 சதவிகித வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராகிறார் புதின்
என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் நாட்டில் ரத்த ஆறு ஓடும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போரில் வீழ்ந்து கிடப்பது போன்று எதிர்ப்பை பதிவு செய்த கலைஞர்கள் இஸ்ரேல் - காசா போருக்கு எதிராக நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
CSK - RCB சென்னையில் மோதும் முதல் ஐபிஎல் போட்டிக்கு இன்று டிக்கெட் விநியோகம் செய்யப்படவுள்ளது. கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்யப்படவுள்ளது.