இன்றைய காலை தலைப்பு செய்திகள் முகநூல்
இந்தியா

காலை தலைப்புச் செய்திகள் | ரூ. 9,000 கோடி முதலீட்டில் ஒப்பந்தம் முதல் டெல்லி செல்லும் ஆளுநர் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ரூ 9,000 கோடி முதலீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தமிழ்நாடு அரசு முதல் ரஞ்சி கோப்பையை வெல்லுமா மும்பை அணி வரை பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி அமைகிறது.

PT WEB
  • ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அதிநவீன வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது டாடா நிறுவனம்.

  • தமிழ்நாட்டுக்கான திட்டங்களை மாநில அரசு தடுக்கிறது என பிரதமர் பொய் பேசுகிறார் என்றும், அதிமுக - பாஜக இடையே கள்ளக்கூட்டணி இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமரசனம்.

    “பிரதமர் வருகையின்போது திமுகதான் இருவேறு நிலைப்பாட்டில் உள்ளது. அதிமுகவுக்கு எப்போதும் நேர்வழிதான்” என எடப்பாடி பழனிசாமி பதில்.

எடப்பாடி பழனிசாமி
  • பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனால், மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

  • தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்லும்நிலையில், பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது.

  • திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக போட்டியிடும் தொகுதிகள் எவை? என்பதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது தகவல்கள் தெரிவிக்கிறது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதல்வர் ஸ்டாலின்
  • பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகாரில் 5 பிரிவுகளின் கீழ் தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • ஜாபர் சாதிக் பற்றிய விவரங்கள், பணப் பரிவர்த்தனைகள், வங்கி கணக்கு விவரங்களை தருமாறு போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் என்.ஐ.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளது.

  • ஜாபர் சாதிக் கூட்டாளி சதாவை கைது செய்தது மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு. இவர், வெளிநாடுகளுக்கு போதைப்பொருளை பேக்கிங் செய்து அனுப்பியதாக விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.

  • மகளிர் உரிமைத்தொகை குறித்து பேசியது சர்ச்சையான விவகாரத்தில் தான் பேசியதை திமுகவினர் திசைதிருப்பி விட்டதாக குஷ்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

  • மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா அடுத்த மாதம்12-ந் தேதி தொடங்குகிறது. ஆகவே, அடுத்த மாதம் 23-ந் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார்.

  • உதகை அருகே மண் சரிந்த விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய பிரமாணப்பத்திரம், எந்த கட்சி, எந்த தேதியில் பணமாக மாற்றின என்ற விவரங்களும் டிஜிட்டல் கோப்புகளாக சமர்ப்பிக்கபட்டன.

  • தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் உறுதியளித்துள்ளார்.

  • மக்களவை தேர்தலுக்கான 72 வேட்பாளர்கள் கொண்ட 2ஆவது பட்டியலை வெளியிட்டது பாஜக. இதன்மூலம், மனோகர் லால் கட்டார் கர்ணால் தொகுதியிலும், அனுராக் சிங் தாக்கூர் ஹமீர்புர் தொகுதியிலும் போட்டியிடவுள்ளனர்.

  • நாட்டில் வறுமையை வேகமாக குறைத்து வருவதாகவும், நடப்பு ஆண்டில் மட்டும் 12 லட்சம் கோடி ரூபாய் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

  • மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு தலா ஒரு லட்சம் நிதி உதவி, மத்திய அரசு வேலைவாய்ப்பில் 50 சதவிகிதம் இடஒதுக்கீடு என காங்கிரஸ் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

  • ஹரியானா மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் நயப் சிங் சைனி. சுயேச்சைகள் 7 பேர் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்கள் வாக்களிப்பால் எளிதாக வெற்றி அடைந்துள்ளார்.

  • டெல்லியில் சாலையோரக் கடைக்குள் கார் புகுந்த விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு - பலர் படுகாயம் அடைந்தனர். இதனால், காரை முற்றுகையிட்டு தாக்குதலில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.

  • ஹமாஸ்-க்கு எதிரான போருக்காக பட்ஜெட்டில் 12 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியது இஸ்ரேல்.மேலும், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளைவிட ராணுவத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

  • ஸ்வீடன் நாடாளுமன்றத்திற்கு எதிரே தர்ணாவில் ஈடுபட்டதில், இளம் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் ஆதிக்கம். பந்துவீச்சாளர்களில் அஸ்வின் முதலிடம் - பேட்டிங்கில் ரோகித், ஜெய்ஸ்வால் முன்னேற்றம்.

ஜெய்ஸ்வால்
  • மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது டெல்லி அணி. கடைசி லீக் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

  • கடைசி நாளான இன்று விதர்பா அணியை வீழ்த்த 5 விக்கெட்டுகள் தேவைப்படும் நிலையில், 42-ஆவது முறையாக ரஞ்சிக்கோப்பையை வெல்லுமா மும்பை அணி என்ற எதிர்ப்பார்ப்பு ரசொலர்ல: ,அட்ஜ்ட்ஜொஉஒ; எழுந்துள்ளது.