இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

தலைப்புச் செய்திகள் | திமுக குறித்து பிரதமர் விமர்சனம் முதல் பிரான்சில் கருக்கலைப்பு சட்ட மசோதா வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது திமுக குறித்து பிரதமர் விமர்சனம் முதல் பிரான்சில் கருக்கலைப்பு சட்ட மசோதா வரை

PT WEB
  • தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு அளிக்கும் பணத்தை மாநில அரசு கொள்ளையடிப்பதற்கு விடமாட்டோம். திமுக கொள்ளையடித்த பணத்தை மீட்போம் என பிரதமர் மோடி பேச்சு.

  • தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைவதால் சிலருக்கு அச்சம் ஏற்படுகிறது. மேலும் வெள்ள பாதிப்பில் திமுக அரசு எதையும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி விமர்சனம்.

  • தமிழகத்தின் நலனுக்காக சல்லிக்காசு கூட கொடுக்காமல் பதவியை காப்பாற்ற ஆதரவு கேட்டு பிரதமர் வருகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்.

  • பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு உளுந்து வடை வழங்கி நூதன பரப்புரை.

  • தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி மனு அளித்துள்ளது.

  • நன்கொடை வியாபாரத்தை மறைக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சிக்கிறார் என எஸ்.பி.ஐ அவகாசம் கேட்பதை குறிப்பிட்டு ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

  • கருணாநிதி நினைவிட அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் அனுமதிச்சீட்டு பெற்று பார்வையிடலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • 2015ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறந்த படமாக தனி ஒருவன், சிறந்த நடிகராக மாதவன், சிறந்த நடிகையாக ஜோதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  • வரும் கல்வியாண்டு முதல் 6ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே சான்றிதழ்கள் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் அளித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
  • சனாதனம் குறித்த வழக்கில் கருத்து சுதந்திரத்தை அமைச்சர் உதயநிதி தவறாக பயன்படுத்தியுள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.இந்நிலையில், வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக உதயநிதி பதில் அளித்துள்ளார்.

  • முதியோர் உதவித் தொகை முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்.

  • 10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி, தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இரவிலும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

  • சென்னை மூலக்கொத்தளத்தில் குடிசை மாற்று குடியிருப்பு வீடுகளை வெளி நபர்களுக்கு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுப்பி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் நோயாளி மற்றும் பயிற்சி மருத்துவர் இடையே மோதல் ஏற்பட்டதில் பெண் மற்றும் உறவினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • உளுந்தூர்பேட்டையில் பழங்குடியின பெண் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்தியவர் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • இரண்டாயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டுவரும் ஜாபர் சாதிக் அடிக்கடி மேற்கொண்ட கென்ய பயணம் தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

தயாரிப்பாளர் ஜாபர் சித்திக்
  • தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களில் போதைப்பொருள் விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட 470 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டிய நிலையில் தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

  • பழனி கிரிவல பாதையில் உள்ள வணிக நிறுவனங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

  • திருப்பதி கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழாவில் கருட வாகன புறப்பாடு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

  • பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொப்பி அணிந்த சந்தேக நபரின் புதிய சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • மஹுவா மொய்த்ராவுக்கு அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட வழக்கில் வரும் 11ஆம் தேதி ஆஜராக சம்மன் அமலாக்கத்துறை சம்மன்.

  • குருகிராமில் உணவகத்தில் மவுத் ஃபிரஷ்னரை பயன்படுத்திய 5 பேருக்கு ரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனடையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

  • புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் தொடர்ந்து சிகிச்சை பெறுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  • கருக்கலைப்பு பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகாரமளித்து பிரான்சில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • கருக்கலைப்பு அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டதை தொடர்ந்து வண்ண விளக்கொளியில் ஜொலித்த ஈஃபிள் டவரில் கொண்டாட்டம்.