திருச்சி மக்களவை தொகுதி நிர்வாகிகளுடன் திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நிறைவு.
திமுக முடிவு செய்பவர்தான் பிரதமராக முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் - அமைச்சர் உதயநிதி பேச்சு
காவிரி நீரை முழுமையாக பெறாமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.
“அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் மீது மக்கள் கோபத்தில் இருக்கின்றனர்” - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம்.
“பாஜகவை தவிர மற்ற கட்சிகளை கூட்டணிக்கு வரவேற்போம்” - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
வரும் 11ஆம் தேதி சென்னை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா. சென்னையில் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு.
“4 எம்எல்ஏக்களை வைத்துள்ள பாஜக கொங்கு மண்டலத்துக்கு என்ன செய்தது? ”- கொங்கு ஈஸ்வரன் கேள்வி
“பாஜக எம்எல்ஏக்கள் என்ன செய்தோம் என்பது தொகுதி மக்களுக்கு தெரியும்” - கொங்கு ஈஸ்வரனுக்கு வானதி சீனிவாசன் பதில்.
அரசியல் கட்சி தொடங்கியதற்காக வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்.
வழிவிடுவது தொடர்பாக சென்னை மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்.
எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவு தொடர்பாக தொழில்நுட்ப குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.
ஆம்பூரில் போக்குவரத்துக்கு இடையூறாக நடைபயணம் மேற்கொண்டதாக புகார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் சிலர் நடனமாடி வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயன் பட பாணியில் தங்கம் கடத்தல். சுமார் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல். மதுரை விமான நிலையத்தில் ஒருவர் கைது.
ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி விவகாரத்தில் 700 ஏஜெண்டுகளிடம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை.
புனித தலங்களின் முக்கியத்துவத்தை முந்தைய ஆட்சியாளர்கள் அறியவில்லை - அசாம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
“பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது காங்கிரஸ் கட்சி..” - ஜார்க்கண்ட் யாத்திரையின்போது ராகுல் காந்தி பேச்சு.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தகவல்...
பொது சிவில் சட்ட வரைவு மசோதாவுக்கு, உத்தராகண்ட் அமைச்சரவை ஒப்புதல்.
ஜம்மு-காஷ்மீரில் தொடரும் பனிப்பொழிவு. வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் வீதிகள்.
ரஷ்யாவில் இந்திய தூதரகத்தில் பணியாற்றியவர் கைது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவு பார்த்ததால் நடவடிக்கை.
சிலி நாட்டில் பயங்கர காட்டுத்தீ. உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு.
ஏமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் முகாம்கள் மீது பிரிட்டன் தாக்குதல். தங்களது கப்பல்களை தாக்கியதால் பதிலடி நடவடிக்கை என பிரதமர் ரிஷி சுனக் விளக்கம்.
2ஆவது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட்