இன்றைய காலை தலைப்புச் செய்திகள் புதிய தலைமுறை
இந்தியா

தலைப்புச் செய்திகள் | ஜார்க்கண்ட் முதலமைச்சர் கைது முதல் ஞானவாபியில் பூஜைசெய்ய நீதிமன்றம் அனுமதி வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முதலமைச்சர் முதல் வாரணாசியில் பூஜை செய்ய நீதிமன்றம் அனுமதி வரை நேற்றைய, இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பை விவரிக்கிறது.

PT WEB

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்.

  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராகிறார் சம்பாய் சோரன் தேர்வு. ஜே.எம்.எம் கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பதவியேற்கிறார்.

  • ஹேமந்த சோரன் கைது செய்யப்பட்ட நிலையில் I.N.D.I.A கூட்டணிக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை.

  • இன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன். விவசாயம், மகளிர் நலன் சார்ந்த அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு.

  • செல்போன் தயாரிப்பில் பயன்படும் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரி 10 விழுக்காடாக குறைப்பு.செல்போன்கள் விலை 3 முதல் 5 விழுக்காடு வரை குறையக்கூடும் என தகவல்.

  • தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை திமுக அரசு ஒருபோதும் ஏற்காது.

  • முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளது முதலீட்டை ஈர்ப்பதற்கான பயணமல்ல, முதலீடு செய்வதற்கானது - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

  • புதுக்கோட்டை வேங்கவயல் குடிநீர்த்தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம்.விசாரணையை 8 வாரத்திற்குள் முடிக்கும்படி சிபிசிஐடி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

  • இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு மாற அனைத்து தகுதிகளும் உள்ளன.

  • ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை செய்ய வாரணாசி நீதிமன்றம் அனுமதி.