இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

காலை தலைப்புச் செய்திகள்: ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் முதல் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் முதல் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் உயர்வு வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. மேலும், பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை. இந்நிலையில், இன்றும் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கணிப்பு.

  • வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற வாய்ப்பு குறைவு என்றும், இதனால், சென்னை மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி.

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்
  • அனைத்து பள்ளிகளிலும் “மாணவர் மனசு” என்ற பெயரில், புகார் பெட்டி வைக்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல். மாணவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க, பாதுகாப்பு ஆலோசனை குழு அமைப்பு.

  • “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தின் கீழ் அனைவரும் பயிற்சி முடித்து வந்து கொண்டிருப்பதால் திராவிடம் மகிழ்கிறது. இவர்களைத் தடுக்க ஏற்படுத்தப்படும் அத்தனை தடைகளையும் உடைப்போம்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு.

  • அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனவும், 42 மாத ஆட்சியில் மக்களுக்கும் எதுவுமே செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

  • அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாக கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் என்று கூறி விமர்சனங்களுக்கு மக்களின் முகமலர்ச்சியே பதிலாக உள்ளதாக, திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.

  • கோயில் பூசாரியை தற்கொலை செய்துகொள்ள தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், ஓபிஎஸ் சகோதரர் ஓ ராஜா உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு.

தற்கொலை தீர்வல்ல
  • நண்டு பிடிக்கப் போய் ஆற்று நீரின் நடுவில் மாட்டிக்கொண்ட குடும்பம். பல மணி நேரம் போராடி மீட்டது தீயணைப்புத்துறை.

  • இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்வு. அக்டோபர் மாதத்தில் 6.21 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல்.

  • நவம்பர் 16ஆம் தேதி முதல் மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும், பிரேசிலில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டிலும் பங்கேற்கிறார்.

  • அமெரிக்காவின் அடுத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் வால்ட்ஸ்சை அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்.

  • மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறப்பு தூதராக ஸ்டீவன் விட்காஃப் நியமனம்.

  • இந்தியா தென்னாப்பிரிக்க இடையே இன்று மூன்றாவது டி20 போட்டி. வெற்றிக் கனியை பறித்து தொடரில் முன்னிலை பெறுமா இந்தியா என் ரசிகர்கள் எதிர்பார்ப்பு.