எல்லையில் அமைதியை உறுதிப்படுத்துவதே நமது முதன்மைப் பணியாக இருக்க வேண்டும் என பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபருடனான சந்திப்பில் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முடித்துவிட்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார். பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க மாநாட்டில் வாய்ப்பு கிடைத்ததாகவும் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பிரியங்கா காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களுக்கு சேவையாற்ற ஒருமுறை வாய்ப்பு தருமாறு உருக்கம்.
ஒடிசா, மேற்கு வங்க மாநில மக்களை அச்சுறுத்தும் டானா புயல். முன்னெச்சரிக்கையாக இரு மாநிலங்களில் 20 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு மாநகரில் மீண்டும் கனமழை பெய்ததால் குளம் போல் சாலைகள் காட்சியளித்தது.. குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
தமிழகத்தில் தேனி, தென்காசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்தது. வாணியம்பாடியில் வெளுத்து வாங்கிய மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்தது.
மதுரையில் கால்வாயில் தவறி விழுந்தவர் 4 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார். கால்வாயில் இருந்த குப்பைகளை அகற்ற முயன்ற போது துயரம்.
திமுக கூட்டணியில் விவாதங்கள் இருக்கின்றன, விரிசல் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு கண்டு வருகிறார் என்றும் திமுக வளர்ச்சி பெற்றதுபோல் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
விஜய்யின் தவெக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டில் அம்பேத்கர், பெரியார், காமராஜருக்கு கட் அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. 15 மணி நேர சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வட்டார போக்குவரத்து, பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கட்டு கட்டாக கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது.
யூடியூபர் இர்ஃபான் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்கள் மருத்துவம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவரான ஹஷம் சஃபியதீன் இஸ்ரேல் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். லெபானானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹஷம் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா அமைப்பு உறுதிப்படுத்தியது.
இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள இஸ்ரேலிய குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் சுற்றுலாத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கமலா ஹாரிஸை அறிவுத் திறன் குறைபாடு உடையவர் என டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். மனநிலை சீராக இல்லாதவரின் நிலை தவறிய வார்த்தைகள் என கமலா ஹாரிஸ் பதில் விமர்சனம்..
டெல்லியில் யமுனை நதி மாசுபாட்டிற்கு பாஜகவின் மோசமான அரசியலே காரணம் என்றும் பாஜக மாநில அரசுகள், டெல்லிக்கு எதிரான ஆயுதங்களாக பயன்படுத்தப்படுவதாகவும் டெல்லி முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
அடுத்த மாதம் தொடங்கும் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகர விளக்கு பூஜை காலம்... சபரிமலையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கேரள முதலமைச்சர் பேச்சு.