Headlines Facebook
இந்தியா

Headlines: கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் முதல் கவரைப்பேட்டை ரயில் விபத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் முதல் கவரைப்பேட்டை ரயில் விபத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • ஹமாஸ் அமைப்பின் தலைவர் சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு. இந்நிலையில், சின்வாரின் மரணம், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்பட வழிவகுக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு.

  • சின்வார் கொல்லப்பட்டதன் மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது என்றும், உயிரிழந்த ஆயிரக்கணக்கானோரின் குடும்பங்களுக்கு நீதி கிடைத்துள்ளதாகவும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கருத்து.

  • கோவை ஈஷா மையத்திற்குச் சென்று காணாமல் போன பலரை கண்டறிய முடியவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை பதில் மனு தாக்கல்.

  • சென்னையில் எந்த மழை வந்தாலும் சமாளிக்க அரசு தயார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.

  • “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டதுதான். இனிமேல், ஒருங்கிணைப்பு என்ற சொற்கள் தேவைப்படாது” என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.

எடப்பாடி பழனிசாமி
  • அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர் என ஆயுள் தண்டனை கைதியை முன்கூட்டியே விடுவிக்க கோரும் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி.

  • 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனக்கே கூட வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என அமைச்சர் பொன்முடி பேச்சால் பரபரப்பு.

  • கவரைப்பேட்டையில் தண்டவாளத்தில் நட்டு, போல்ட்டுகள் கழற்றப்பட்டிருந்ததே விபத்துக்கு காரணம் என்றும், சில இடங்களில் ஜங்ஷன் பாயிண்ட்டுகள் காணாமல் போனதும் விசாரணையில் அம்பலம்.

  • சென்னையில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய கோயில் அர்ச்சகரை, முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய பொதுமக்கள்.

  • சென்னை சூளைமேட்டில் இரும்பு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளுக்கு புகை பரவியதால் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்.

  • காலிஸ்தான் ஆதரவாளர் கொலை வழக்கில் இந்தியாவிடம் உளவு தகவல்களை மட்டுமே பரிமாறியதாக கனடா பிரதமர் விளக்கம். இந்நிலையில், இந்தியா-கனடா உறவு விரிசலுக்கு ட்ரூடோ மட்டுமே பொறுப்பு என மத்திய அரசு கண்டனம்.

ஜஸ்டின் ட்ரூடோ
  • யூஜிசி நெட் முதல் பருவ தேர்வு முடிவுகள் வெளியீடு .மேலும், பாடவாரியாக கட்-ஆப் மதிப்பெண்களையும் வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.

  • பணமோசடியில் ஈடுபட்ட சூதாட்ட செயலியுடன் நடிகை தமன்னாவுக்கு தொடர்பா? என அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை.

  • பெங்களூருவில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி. முதல் இன்னிங்சில் 46 ரன்களில் சுருண்ட இந்தியா. நிதானமான ஆட்டத்தில் நியூசிலாந்து.

  • டி20 மகளிர் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா. அரையிறுதி போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்.