மழையில் மிதக்கும் பெங்களூரு முகநூல்
இந்தியா

காலை தலைப்புச் செய்திகள் | தண்ணீரில் மிதக்கும் பெங்களூர் முதல் வாபஸ் பெறப்பட்ட ரெட் அலர்ட் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, தண்ணீரில் மிதக்கும் பெங்களூர் முதல் வாபஸ் பெறப்பட்ட ரெட் அலர்ட் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது. இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கையும் விலக்கிக் கொள்ளப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கல்வி நிலையங்கள் இன்று வழக்கம்போல் செயல்படும் என்றுரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து அறிவிப்பு வெளியானது.

  • சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நல்லமுறையில் கை கொடுத்துள்ளதாக முதலமைச்சர் பேட்டி. எஞ்சியுள்ள 30 சதவிகித பணிகளும் விரைவில் நிறைவடையும் என நம்பிக்கை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
  • இன்று புதுச்சேரி - நெல்லூர் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

  • அரசும், மக்களும் தயாராக இருக்க வானிலை அறிவிப்புகள் துல்லியமாக இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

  • பட்டாளம், பெரம்பூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும், பள்ளிக்கரணையிலும் மழைநீர் வடியாததால் மக்கள் அவதி.

  • தென்சென்னைப் பகுதிகள் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க காரணமான ஒக்கியம் மடுவு. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையும், பக்கிங்காம் கால்வாயை இணைக்கும் பகுதியில் நடந்த தூர்வாரும் பணிகளால் சாத்தியமான அற்புதம்.

  • சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 7 லட்சம் பேருக்கு மேல் உணவு வழங்கப்பட்டது என தமிழக அரசு அறிக்கை.

  • ரேசன் கடைகளில் பருப்பும், பாமாயிலும் தீபாவளிக்குத் தங்கு தடையின்றி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மீண்டும் உறுதி செய்துள்ளார்.

தீபாவளிக்கு பருப்பு, பாமாயில் தங்கு தடையின்றி வழங்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி
  • மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 விழுக்காடு உயர்வு. சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிப்பு.

  • ஹரியானா முதலமைச்சராக 2வது முறையாக இன்று பதவியேற்கிறார் நயப் சிங் சைனி. அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்

  • ஜம்மு காஷ்மீரின் புதிய முதலமைச்சர் பதவியேற்றார் உமர் அப்துல்லா. அந்நிகழ்ச்சியில், ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு.

  • கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறிவிட்டதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு. மோடி அரசுக்கு எதிரான கனடா நாட்டவர்களின் விவரங்கள் இந்தியாவுக்கு பகிரப்படுவதாகவும் புகார்.

  • காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தெற்கு ஆந்திராவில் நீடிக்கிறது கனமழை. தொடர் மழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது பெங்களூரு.

  • பெங்களூருவில் நடைபெறவிருந்த இந்தியா - நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து. இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று போட்டி தொடங்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

  • அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான கருத்து கணிப்பில் முந்துகிறார் கமலா ஹாரிஸ். சுகாதாரம், ஜனநாயக அச்சுறுத்தலுக்கு கமலா தீர்வு காண்பார் என 45 சதவீதம் பேர் ஆதரவு.