Headlines facebook
இந்தியா

Headlines: சென்னையில் கொட்டித்தீர்த்த மழை முதல் மகளிர் டி20 உலகக்கோப்பையில் வெளியேறிய இந்திய அணி வரை

PT WEB
  • சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

  • நள்ளிரவில் மழை பெய்துகொண்டிருந்தபோது நேரில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி. மேலும், நாராயணபுரம் ஏரியில் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

  • மதுரை மாநகரில் இரண்டாவது நாளாக இரவு நேரத்தில் கனமழை பெய்தநிலையில், 4 மணி நேரத்திற்கு மேல் நீடித்தததால், வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்.

சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் மழை!
  • கோவையில் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய அரசுப்பேருந்து. இந்நிலையில், பயணிகளை பத்திரமாக மீட்ட மீட்புப்படையினர்.

  • கனமழை எச்சரிக்கையால் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிப்பு. மேலும், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலிலும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை.

  • சென்னையில் வரும் 17ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என கணிப்பு. மேலும், நாளை அதி கனமழை பதிவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை.

  • கனமழை எச்சரிக்கையை அடுத்து பால் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய முதலமைச்சர் உத்தரவு.

  • தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வரும் 18 ஆம்தேதி வரை WORK FROM HOME அளிக்க அறிவுறுத்தல்.

  • ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி.

  • மழை வெள்ளத்தால் பாதிக்கும் மக்களை மீட்க நடவடிக்கை எடுக்காமல் ஆலோசனைக்கூட்டம் நடத்துவதாக இபிஎஸ் கண்டனம்.

எடப்பாடி பழனிசாமி
  • பேரிடர் காலத்திலும் தனக்கு விளம்பரம் கிடைக்காதா என எடப்பாடி பழனிசாமி காத்திருப்பதாக, அமைச்சர் கே.என்.நேரு பதிலடி.

  • சாம்சங்க் ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எந்த முடிவும் எட்டப்படவில்லை என சிஐடியு அறிவிப்பு.

  • நில தகராறில் சேலத்தில் அக்கா, தம்பி கொடூரக் கொலை கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை.

  • ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் இபாஸ் நடைமுறையை முறையாக அமல்படுத்தப் படவில்லை. எந்த சோதனையும் செய்யப்படுவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி.

  • திண்டிவனத்தில் திமுக நிர்வாகி தன்னை தாக்கியதாக பாமக நிர்வாகி புகர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை.

  • தினபூமி நாளிதழின் உரிமையாளர் மணிமாறன் சாலை விபத்தில் உயிரிழப்பு.

  • நெல்லை அருகே நேரிட்ட விபத்தில் காரை ஓட்டிச்சென்ற மகன் படுகாயம்.

  • ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைக்க தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லாவை அழைத்தார் துணை நிலை ஆளுநர். இந்நிலையில், நாளை காலை பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிப்பு.

  • இன்று நடைபெறுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம். இந்நிலையில், உரிய நீரை தர கர்நாடகாவுக்கு உத்தரவிட வலியுறுத்த தமிழக அரசு திட்டம்.

  • வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், மாநில உரிமைகளை மீறுவதாக குற்றச்சாட்டு

  • வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. ஆனால், காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு.

  • இந்தியா - கனடா உறவில் மீண்டும் விரிசல். பரஸ்பரம் மேற்கொள்ள ஆறு தூதரக அதிகாரிகளை வெளியேற்றி நடவடிக்கை.

  • வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவு மோசமாக இருந்ததாக திரைப்பட இயக்குநர் பார்த்திபன் பதிவு. இந்நிலையில், மோசமான உணவை வழங்கிய ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக ரயில்வே விளக்கம்.

  • மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்தியா அணி வெளியேற்றம். குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்.

  • பொருளாதாரத்திற்கன நோபல் பரிசு அறிவிப்பு. அமெரிக்காவைச் சேர்ந்த டேரன் அசிமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ராபின்சன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.