அநுராகுமார திஸநாயக, எடப்பாடி பழனிசாமி pt web
இந்தியா

தலைப்புச்செய்திகள்|இலங்கை அதிபராகும் அநுராகுமார திஸநாயக? TO ’அதிமுக இணைப்பு’ குறித்து இபிஎஸ் பேச்சு!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இலங்கை அதிபர் தேர்தல் முதல் அதிமுக இணைப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB

தேசிய மக்கள் சக்தி அமைப்பின் தலைவர் அநுராகுமார திஸநாயக இலங்கை அதிபராகிறார். சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கரமசிங்க போன்றோர் தொடர்ச்சியாக பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிபர் தேர்தல் நடந்து கொண்டிருந்த சூழலிலும், இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

தவெக தலைவர் விஜய்

விஜயின் தவெக மாநாடு ஏற்பாடு பணிகளை மேற்கொள்ள 23 முதல் 30 குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனைத்து பணிகளையும் முடிக்க தமிழக வெற்றிக் கழகம் திட்டம்...

உலகளாவிய பிரச்னைக்கு ஜனநாயக முறையில் தீர்வு அவசியம் என குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க - இந்திய உறவை மேம்படுத்துவது குறித்து ஜோ பைடனுடனும் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

ட்ரம்ப், கமலா ஹாரிஸ்

மீண்டும் ஒரு நேரடி விவாதத்தில் பங்கேற்க முடியாது என கமலா ஹாரிஸின் அழைப்பை நிராகரித்தார் டொனால்டு ட்ரம்ப்..

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க வங்கதேச அணி போராடி வருகிறது. 3 ஆம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்ப்பு...

திருப்பதி லட்டின் புனிதம் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கோயிலில் பரிகாரம் செய்வது குறித்து ஜீயர்கள், சனாதன நிபுணர்களுடன் ஆலோசனை...

எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் நீக்கப்பட்டது இறுதியானதுதான் என்றும் திட்டவட்டம்...