காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

தலைப்புச் செய்திகள் |நல்லாசிரியர் விருது அறிவிப்பு முதல் இன்று தொடங்கும் பாராலிம்பிக் போட்டிகள் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, நல்லாசிரியர் விருது அறிவிப்பு முதல் பாராலிம்பிக் போட்டிகள் தொடக்கம் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் கோபிநாத், முரளிதரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு. இவ்விருதினை செப்டம்பர் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் வழங்கி சிறப்பிக்க இருக்கிறார்.

  • முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டை 2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றக்கூடிய இலக்கை அடைவோம்” என சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்படும் முன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி.

  • ‘அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?’ என்ற கேள்விக்கு “மாறுதல் ஒன்றே மாறாதது. பொறுத்திருந்து பாருங்கள்” என்று முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனம் 100 சதவிகிதம் சரி. எனது கருத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை” என்று அண்ணாமலை உறுதி.

  • அண்ணாமலைக்கு அரசியல் நாகரீகம் இல்லை. ரஃப் அன்ட் டஃப் எடுபடாது” என்று அதிமுக முன்னாள் ஜெயக்குமார் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி.

  • திருச்சி எஸ்பி வருண்குமாரின் மனைவியும், புதுக்கோட்டை எஸ்.பி.யுமான வந்திதா பாண்டேவிற்கு கனிமொழி எம்.பி. ஆதரவு தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான அருவெறுக்கத்தக்க பரப்புரைகளை ஏற்க முடியாது எனவும் கண்டனம்.

  • நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை. ஆறுகளில் கரைபுரளும் வெள்ளம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

  • கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை. காவல்துறையால் தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து இன்று 12 மணிநேர பொது வேலைநிறுத்தத்துக்கு பாஜக அழைப்பு.

kolkata doctor case violence
  • மேற்குவங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மம்தா தவறிவிட்டதாக ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு. சர்வாதிகாரி போன்று மம்தா ஆட்சி செய்துவருவதாகவும் விமர்சனம்.

  • 2024ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம். பாரிஸ் வீதிகளில் வலம் வந்த ஜோதி.... போட்டிகளை காண குவியும் ரசிகர்கள்.