அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தன் 17 நாட்கள் பயணத்தில் முன்னணி நிறுவனத் தலைவர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் முதல்வர்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி இடையே உடன்பாடு. கூட்டணியில் இருந்தாலும் 5 தொகுதிகளில் தோழமையுடன் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக அறிவித்த வேட்பாளர்களுக்கு தொண்டர்கள் எதிர்ப்பு. இதனால் 44 பேர் கொண்ட பட்டியலை 16 பேர் கொண்ட பட்டியலாக குறைத்து வெளியிட்டுள்ளது பாஜக தலைமை.
“பல் போன நடிகர் எனும் விமர்சனத்தால் வருத்தமில்லை” என ரஜினினியும், “நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம்” என்று அமைச்சர் துரைமுருகனும் கருத்து.
“மைக் கிடைத்தால் போதும், அண்ணாமலை பொய் பொய்யாகப் பேசுவார்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். இதற்கு, பதிலுக்கு “இ.எம்.ஐ. முறையில் பதவி பெற்றார் இபிஎஸ்” என பல கடும் வார்த்தைகளை கூறி அண்ணாமலை பேச்சு.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் பண்பொழி குடியிருப்பு பகுதியை அச்சுறுத்திய காட்டு யானையை 15 மணி நேர போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் காட்டுக்குள் அனுப்பினர்.
திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கிற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராக இருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பள்ளி மாணவர் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழப்பு. தூக்கில் தொங்கிய உடலில் காயங்கள் இருந்ததால் பல கேள்விகள் எழுந்துள்ளன.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் சந்தேகம் முழுமையாக தீரும் வரை தேடுதல் பணி தொடரும் என கேரள வனத்துறை அமைச்சர் சசிதரன் உறுதி.
மலையாள திரையுலகை அதிர வைக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்... மேலும் சில நடிகைகளும் நடந்த கொடுமைகளை வெளிப்படுத்தியதை அடுத்து, பரபரப்பு.
ரஷ்யாவில் 38 மாடி கட்டடத்தின் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், உக்ரைன் மீது ஏவுகணைகளை வீசி சரமாரி பதிலடி கொடுத்தது ரஷ்ய ராணுவம்.