தலைப்புச் செய்திகள் புதிய தலைமுறை
இந்தியா

தலைப்புச் செய்திகள் | உக்ரைனுக்கு புறப்பட்ட மோடி முதல் அகழாய்வில் கிடைத்த அரிய பொக்கிஷம் வரை!

PT WEB
  • போலந்தை தொடர்ந்து போர் நடக்கும் உக்ரைனுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி. இதற்காக, போர்ஸ் ஒன் சிறப்பு ரயிலில் 10 மணி நேரம் பயணம் மேற்கொண்டார்.

  • கொல்கத்தாவில் 11 நாளாக நீடித்த மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் நேற்றைய தினம், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று இன்று முதல் முழு வீச்சில் மருத்துவ சேவைகள் நடைபெறவுள்ளன.

  • ஆர்ஜி கர் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் உட்பட 6 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ கேட்டுக் கொண்டதை அடுத்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு நீதிகேட்டு நடந்த போராட்டம்
  • ஆந்திராவில் மருந்து ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் என, மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்தப் பின் மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.

  • தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களுக்குள் 10 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த நடவடிக்கை. புதிய தலைமுறை செய்தி வெளியிட்ட நிலையில் ஆளுநர் மாளிகை விளக்கம்.

  • சிவப்பு, மஞ்சள் வண்ணத்தில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்.

  • தவெக கொடியில் யானை உருவம் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், அதற்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

  • தருமபுரி மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கையை மீறி கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்த செவிலியரை கையும் களவுமாக கைது செய்தனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

கருக்கலைப்பு
  • பள்ளி மாணவர்களை அறையில் அடைத்து துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு. இந்நிலையில், மாணவர்களை கண்டிக்க மட்டுமே செய்ததாக காவல்துறை தரப்பில் விளக்கம்.

  • சென்னையில் பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து மாமூல் கேட்டு மிரட்டல். இந்நிலையில், கடையை எரித்து விடுவதாக அச்சுறுத்திய ரவுடியை கைது செய்தது காவல்துறை.

  • வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த அரிய பொக்கிஷம். சூதுபவள மணியில் சீறும் காளை உருவம் பொறித்த பதக்கம் கண்டெடுப்பு.

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சூதுபவள மணி
  • பிரிஜ்பூஷண் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்பிய மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதா?.. வினேஷ் போகத் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தது டெல்லி காவல்துறை.

  • வெனிசுலா அதிபர் மதுரோவின் தேர்தல் வெற்றியை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். மோசடியாக வெற்றி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.