இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

தலைப்புச் செய்திகள் | குரங்கு அம்மைக்கான வழிகாட்டு நெறிமுறை முதல் இன்று விண்ணில் பாயும் SSLV-D3 வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, குரங்கு அம்மைக்கான வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டது முதல் விண்ணில் பாயும் எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • குரங்கு அம்மைக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. முன்னதாக, உலக சுகாதார நிறுவனம் அவசர நிலையை அறிவித்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • அத்திக்கடவு - அவிநாசி நீர்ப்பாசனத் திட்டத்தை நாளை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்துவங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தகவல்.

  • இன்று ஒரே நாளில் நடைபெறுகிறது திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுக அவசர செயற்குழு கூட்டம் முப்பெரும் விழா குறித்து திமுகவும், கட்சி விதிகளை மாற்றுவது குறித்து அதிமுகவும் ஆலோசிக்க உள்ளதாக தகவல்.

  • காலை 9.17 மணியளவில் விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட். புவி கண்காணிப்பு, பேரிடர் கால செயல்பாடுகளில் கைகொடுக்கும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

  • புதுக்கோட்டை அருகே கருக்கலைப்பின்போது பெண் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் மருத்துவரை கைது செய்ய கோரிக்கை சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொள்கிறது மாவட்ட சுகாதாரத்துறை.

  • கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு இந்திய மருத்துவ சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில், கொல்கத்தா, டெல்லியில் மருத்துவர்கள் தொடர் போராட்டம்.

  • பயிற்சி மருத்துவர் கொலையில் தொடர்புடையவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தல். கொல்கத்தாவில் இன்று பேரணி நடத்தப்போவதாகவும் அறிவிப்பு.

  • ஆந்திர முன்னாள் அமைச்சர்கள் ரோஜா, தர்மன கிருஷ்ணதாஸ் மீது நிதிமோசடி புகார். இதனையடுத்து, விசாரணை நடத்த விஜயவாடா காவல் ஆணையருக்கு குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ரோஜா, தர்மன கிருஷ்ணதாஸ்
  • வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க மொய்விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், வத்தலக்குண்டு, சாத்தூரில் பணத்தை வாரி வழங்கிய பொதுமக்கள்.

  • ட்ரம்பையும், எலான் மஸ்கையும் நடனமாட வைத்துள்ளது AI தொழில்நுட்பம். இருவரும் பிரபல பாப் பாடலுக்கு நடனமாடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரல்.

  • நாளை வெளியாகிறது விஜய்யின் கோட் படத்தின் டிரைலர் செப்டம்பர் 5ஆம் தேதி படம் ரிலீசாவதால், ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ட்ரீட்.